×

’99 சதவிகித ஆரோக்கிய குறைப்பாடுகளுக்கு காரணம் இதுதான்’ விளக்குகிறார் டாக்டர் மெகர்.

உடலும் மனதிற்கும் உள்ள நெருக்கத்திற்கு ஈடாக வேறு எதையும் சொல்லிவிட முடியாது. மனதில் சின்ன பிரச்னை என்றாலும் உடனே அதை முகம் மற்றவர்களுக்குக் காட்டிக்கொடுத்துவிடும். இந்த லாக்டெளன் காலத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துவிட்டதாகவும் ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. கொரோனா தவிர்த்த மற்ற உடல்நல பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கியமான காரணம் நாம் மனதை முறையாகக் கையாள்வதில் கவனம் செலுத்தாமல் இருப்பதும்தான். ஒரு நிகழ்ச்சியில், கொரோனா வைரஸ் பாதிப்பு சூழ்நிலையில் குடும்ப உறவுகள் என்ற தலைப்பில் சேலம் மெகர்
 

உடலும் மனதிற்கும் உள்ள நெருக்கத்திற்கு ஈடாக வேறு எதையும் சொல்லிவிட முடியாது. மனதில் சின்ன பிரச்னை என்றாலும் உடனே அதை முகம் மற்றவர்களுக்குக் காட்டிக்கொடுத்துவிடும்.

இந்த லாக்டெளன் காலத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துவிட்டதாகவும் ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. கொரோனா தவிர்த்த மற்ற உடல்நல பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கியமான காரணம் நாம் மனதை முறையாகக் கையாள்வதில் கவனம் செலுத்தாமல் இருப்பதும்தான்.

ஒரு நிகழ்ச்சியில், கொரோனா வைரஸ் பாதிப்பு சூழ்நிலையில் குடும்ப உறவுகள் என்ற தலைப்பில் சேலம் மெகர் மைன்ட் கேர் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர். மெகர் உரையாற்றினார்.

’15 ஆண்டுகளாக மருத்துவத் துறையில் உள்ள டாக்டர். மெகர், மன அழுத்தம் காரணமாகத்தான் 99 சதவீத ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. பல்வேறு வீட்டுப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் சமயத்தில் தான் நிறைய நோயாளிகளுக்கு காய்ச்சல், வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

Woman with short hair feels strong heart pain isolated. People, healthcare and medicine concept

எதிர்மறை எண்ணங்களை வெற்றி கொள்வதற்கு, ஆக்கபூர்வ சிந்தனைகளை அதிகரித்துக் கொள்ள வேண்டியதன் அவசியம்.

எதிர்காலத்தில் தங்களுக்கு எது நடக்க வேண்டும் என்பது குறித்து ஆக்கபூர்வ சிந்தனைகளை அதிகரித்துக் கொண்டால், எதிர்மறை சிந்தனைகள் அடிபட்டுப் போய்விடும்

பிரச்சினைகளின் அடிப்படையில் இல்லாமல், தேவைகளின் அடிப்படையில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். பல்வேறு தேவைகள் குறித்து ஒரு டைரி பராமரிப்பது அவசியம். குடும்பம் அல்லது சமூகப் பிரச்சினைகளால் எப்போது எதிர்மறை சிந்தனை தோன்றினாலும், அதுபற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு, அதை எப்படி நேர்மறையானதாக மாற்றலாம் என யோசிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

எப்போதுமே ஒரு பிரச்னையின் தொடக்கத்தைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். அப்போதுதான் அதனை முழுமையாகவும் எளிதாகவும் தீர்க்க முடியும். அதேபோல உடல்நலப் பிரச்னைகளின் ஆதாரப் புள்ளியான மனநலச் சிக்கலையும் தெரிந்துகொள்வதே அதை குணமாக்குவதற்கு உதவும். அடுத்து உடல்நலச் சிக்கலும் வராது தடுக்கலாம்.