×

மேற்கு மாம்பலம் ‘தோசை மாமா கடை’… எது எடுத்தாலும் 40 ரூபாய்.!

கடைக்காரர் பெயர் ரவிச்சந்திரன்.கடைக்கு பாரதி ஈவ்னிங் டிஃபன் செனட்டர் என்று பெயர் வைத்து , அதை ஒரு ஃபிளக்சிலும் அடித்து நிறுத்தி வைத்து இருக்கிறார். ஆனால் மேற்கு மாம்பல வாசிகள் இது எதையுமே கண்டுகொள்ளாமல் ரவிச்சந்திரன் கடையை ‘தோச மாமா கடை’ ஆக்கிவிட்டார்கள். பத்தாண்டுகளாக இதே இடத்தில் இருக்கிறது இந்தக் கடை,சிறப்பான வியாபாரம் , பேச்சிலர்கள் கொண்டாடுகிறார்கள். காரணம் இவர் தருகிற சுவை. மெனு என்றால்,ஒரே ஒரு ஐட்டம்தான்.தோசை,தோசை,மீண்டும் மீண்டும் தோசை,அதற்கு அபுறமும் தோசை. தோசைக்கு காரச்சட்டினி,தேங்காய்
 

கடைக்காரர் பெயர் ரவிச்சந்திரன்.கடைக்கு பாரதி ஈவ்னிங் டிஃபன் செனட்டர் என்று பெயர் வைத்து , அதை ஒரு ஃபிளக்சிலும் அடித்து நிறுத்தி வைத்து இருக்கிறார். ஆனால் மேற்கு மாம்பல வாசிகள் இது எதையுமே கண்டுகொள்ளாமல் ரவிச்சந்திரன் கடையை ‘தோச மாமா கடை’ ஆக்கிவிட்டார்கள்.

பத்தாண்டுகளாக இதே இடத்தில் இருக்கிறது இந்தக் கடை,சிறப்பான வியாபாரம் , பேச்சிலர்கள் கொண்டாடுகிறார்கள். காரணம் இவர் தருகிற சுவை.
மெனு என்றால்,ஒரே ஒரு ஐட்டம்தான்.தோசை,தோசை,மீண்டும் மீண்டும் தோசை,அதற்கு அபுறமும் தோசை. தோசைக்கு காரச்சட்டினி,தேங்காய் சட்டினி,சாம்பார் எப்போதும் உண்டு.வெரைட்டியை தோசைகளில் காட்டுகிறார் தோசை மாமா.

பொடி தோசையில் மட்டும் தேங்காய் பொடி தோசையில் மட்டும்,காரப்பொடி தோசை,கரிவேப்பிலைப்பொடி தோசை,எள்ளுப்பொடி தோசை, தேங்காய் பொடி தோசை என நான்கைந்து வகைகள் இருக்கின்றன. இன்னும் புதினா தோசை , பூண்டு தோசை, மிளகு தோசை ,மசால் தோசை, மைசூர் மசால் தோசை,தக்காளி தோசை,புதினா தோசை என்று இருபத்தைந்து வகையான தோசைகள் தருகிறார்.இது தவிர தோசை குடும்பத்தின் ஒன்று விட்ட சொந்தங்களான பெசரட்டு, அடை,செட் தோசை போன்றவையும் உண்டு.இவற்றுக்கு அவியல், கும்பகோணம் கடப்பா,வெஜ்ஜிடபிள் குருமா,வடகறி என்று அவ்வப்போது தொடுகறிகளும் மாறும்.இன்றைய ஸ்பெஷ்ல என்று ஒரு புதிய ஐட்டத்தையும் இறக்குகிறார்.

அந்த லிஸ்ட்டில்,கேழ்வரகு தோசை,கம்பு தோசை,கோதுமை தோசை,நவதானிய தோசை என்று இன்னொரு வெரைட்டியான லிஸ்ட் போகிறது.சிறிய தள்ளுவண்டிக் கடைதான்.தோசைகள் போடுவது பார்சல் கட்டுவது எல்லாம் ரவிசந்திரனே செய்கிறார்.வண்டிக்குப் பின்னால்தான் வீடு.அவர் மனைவி வீட்டில் இருந்தபடியே மாவு வகைகள், சட்டினி வகைகள் செய்து தருகிறார். மாலை 7 மணியில் இருந்து 9.30 வரை வியாபாரம் சூடாக நடக்கிறது. ஞாயிறு ஒரு நாள் மட்டும் விடுமுறை.பார்சல்கள்.பறக்கின்றன.

வாடிக்கையாளர்கள் நெய்தோசையிலும் எல்லா காய்கறிகளையும் வெட்டிக் கலந்த சாலடை நடுவில் அள்ளி வைத்து முக்கோனமாக மடித்துத் தரப்படும் வெஜிடபிள் தோசையிலும், செட் தோசையிலும் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். அடுத்த ஹிட் என்று பூண்டு தோசையையும், செட் தோசையையும் சொல்லலாம். எல்லா தோசையும் ஒரே விலை , நாற்பது ரூபாய்.ஆனால் ரவிச்சந்திரன் தரும் சுவையில் இது அதிகமாகத் தெரிவதில்லை அவரது வாடிக்கையாளர்கள் மத்தியில்.

சென்னை மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா சாலையி இருக்கும் அயோத்தியா மண்டபத்திற்கு பின்னால் இருக்கும் விநாயகர் தெருவில் இருக்கிறது கடை.