×

மீன் பிரியர்கள் நாளைக்கே நல்லா சாப்பிட்டுக்கோங்கோ… இதுக்கு அப்புறம் அவ்வளவு தான்!

தமிழக கடல் பகுதி களில் ஏப்ரல், மே மாதங்களை மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாக கண்டறியப்பட்டுள்ளது சென்னை: வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் விதவிதமாக அசைவ உணவுகளை வீடுகளில் சமைப்பது வழக்கம். அந்த வகையில், நாளைய தினம் உங்களால் எந்த அளவுக்கு மீன்களை வாங்கி சமைக்க முடியுமோ அந்த அளவுக்கு சமைத்து ருசித்து விடுங்கள்..அதற்கு காரணமும் இருக்கு…. தமிழக கடல் பகுதி களில் ஏப்ரல், மே மாதங்களை மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக்
 

தமிழக கடல் பகுதி களில் ஏப்ரல், மே மாதங்களை மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாக கண்டறியப்பட்டுள்ளது

சென்னை: வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் விதவிதமாக அசைவ உணவுகளை வீடுகளில் சமைப்பது வழக்கம். அந்த வகையில், நாளைய தினம் உங்களால் எந்த அளவுக்கு மீன்களை வாங்கி சமைக்க முடியுமோ அந்த அளவுக்கு சமைத்து ருசித்து விடுங்கள்..அதற்கு காரணமும் இருக்கு….

தமிழக கடல் பகுதி களில் ஏப்ரல், மே மாதங்களை மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாக கண்டறியப்பட்டுள்ளது. கடலில் மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான இந்த நாட்களில், மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பட்டு, மீன்வளம் பெருக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, இந்த கால கட்டத்தில் மீன் வளத்தை பெருக்கும் நோக்கத்தில் விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலம் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம். தடை காலத்தில் வலைகளை சரி செய்வது, படகுகளை பழுது நீக்குவது உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் ஈடுபடுவர்.

அதன்படி, கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும், தமிழக கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதும், திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன் பிடிப்பதை தடை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மீன்பிடி தடை காலம் அமலாவதால், மீன் வரத்து குறைந்து, விலை கணிசமான அளவுக்கு உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே, நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் பிரியர்கள் மீன்களை வாங்கி ஒரு கட்டு கட்டி விடுங்கள். இல்லையென்றால், அடுத்து வரும் வாரங்களில் அதிக விலை கொடுத்தே மீன்களை வாங்க வேண்டி இருக்கும். மீன்களின் விலை மீண்டும் பழைய நிலைக்கு வர 61 நாட்கள் நீங்கள் காத்திருக்க வேண்டும்.

இதையும் வாசிங்க

பழைய பிரியாணி சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி: அதிர்ச்சி சம்பவம்!