×

மழைக்கால நோய்கள்: நீங்களும் செய்யலாம்  பாட்டி வைத்தியம்!

வீட்டு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் மூலம் தயாரிக்கப்படும் இரண்டு மழைக்கால சிறப்பு இயற்கை மருந்துகள், உங்களைக் குணப்படுத்தி ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவும்.அவற்றைப் பற்றி இங்குக் காணலாம். மழைக்காலங்களில் எதிர்ப்புசக்தி குறைந்து விடுவதால் தொற்று, ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வரக்கூடும். இந்தச் சமயங்களில் மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் இயற்கை மருந்தாகவும், பானமாகவும் நம்முடைய உடல் தொற்றை எதிர்த்து தாக்குப்பிடிக்க வலுப்படுத்தி நம்மை ஆரோக்கியமாக வைக்கிறது. வீட்டு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் மூலம் தயாரிக்கப்படும் இரண்டு மழைக்கால
 

வீட்டு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் மூலம் தயாரிக்கப்படும் இரண்டு மழைக்கால சிறப்பு இயற்கை மருந்துகள், உங்களைக் குணப்படுத்தி ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவும்.அவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.

மழைக்காலங்களில் எதிர்ப்புசக்தி குறைந்து விடுவதால் தொற்று, ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வரக்கூடும். இந்தச் சமயங்களில் மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் இயற்கை மருந்தாகவும், பானமாகவும் நம்முடைய உடல் தொற்றை எதிர்த்து தாக்குப்பிடிக்க வலுப்படுத்தி நம்மை ஆரோக்கியமாக வைக்கிறது. வீட்டு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் மூலம் தயாரிக்கப்படும் இரண்டு மழைக்கால சிறப்பு இயற்கை மருந்துகள், உங்களைக் குணப்படுத்தி ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவும்.அவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.

துளசி மற்றும் கரும் மிளகு மருந்து:

 

தேவையான பொருட்கள்: 

 

*2 கப் தண்ணீர்

*1 தேக்கரண்டி சர்க்கரை

*1 தேக்கரண்டி நன்கு நசுக்கிய கரும் மிளகு

*1 தேக்கரண்டி நன்கு வெட்டப்பட்ட இஞ்சி

*1 தேக்கரண்டி நெய்

*ஒன்று அல்லது இரண்டு கிராம்பு

*ஒரு சில துளசி இலைகள்

செய்முறை:

*கடாயில் நெய்யைக் காய்ச்சி, சிறிது கிராம்பு, கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் துளசி சேர்க்கவும்.

*பொருட்களை நன்றாகத் தாளித்த பிறகு, தண்ணீர் மற்றும் சர்க்கரை சேருங்கள்.

*இந்தக் கலவையை மிதமான தீயில் 15 – 20 நிமிடங்களுக்குச் சமைத்து, அவ்வப்போது கிளறிவிட மறந்து விடாதீர்கள்.

*சில துளசி இலைகளைச் சேர்த்து, மேலும் இரண்டு நிமிடங்களுக்குச் சமைக்கவும்.

*அதிகபட்ச நன்மைகள் பெற இந்த மருந்தைச் சூடாக தினசரி இரண்டு முறை உட்கொள்ளுங்கள்.

கசாயம்:

 

கசாயம் என்பது, மூக்கு பிரச்சனைகளை குணப்படுத்த பருவமழைக் காலத்தில் சைனஸ் தொந்தரவைத் தீர்க்க உதவும் ஆயுர்வேத பானமாகும். 

தேவையான பொருட்கள்:

*வறுத்த கொத்தமல்லி விதை

 

*சீரகம்

 

*பெருஞ்சீரக விதைகள்

 

*கருப்பு மிளகுத்தூள்

 

செய்முறை:

 

*வறுத்த கொத்தமல்லி, சீரகம் மற்றும் பெருஞ்சீரக விதைகளைக் கருப்பு மிளகுத்தூள் உடன் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மருந்துப் பொருட்களையெல்லாம் நன்கு பொடியாக அரைத்து காற்று புகாத பாத்திரத்தில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 

*தேவைப்படும் போது, ஒரு குவளை தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் ஒரு தேக்கரண்டி கஷாய பொடியை சிறிது வெள்ளத்துடன் சேர்த்து கொள்ளுங்கள்.