×

மதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா

உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையைக் கேரள மாநிலம் பெறும். குமரக்கோமில் உணவகத்தை நடத்தி வந்த பெண்ணிற்கு விருது கிடைத்தது பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது பசிபிக் ஆசியப் பயண சங்கத்தின் (பாட்டா )மூன்று மதிப்புமிக்க பயண விருதுகளைக் கேரள சுற்றுலாத் துறை வென்றுள்ளது. இந்தியச் சுற்றுலாத் துறை ஒரு விருதை பெற்றுள்ளது. கடந்த 19-ம் தேதி, கஜகஸ்தான் நாட்டின் நூறு–சுல்தான்(ஆஸ்தான) நகரத்தில் நடைபெற்ற பாட்டா டிராவல் மார்ட் 2019 விழாவில் கேரள சுற்றுலாத்துறைக்கு பாட்டா 3 தங்க விருதுகளை வழங்கி கவுரவித்தது. விருதுகளை கேரள சுற்றுலாத்
 

உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையைக் கேரள மாநிலம் பெறும். குமரக்கோமில் உணவகத்தை நடத்தி வந்த பெண்ணிற்கு விருது கிடைத்தது பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது

பசிபிக் ஆசியப் பயண சங்கத்தின் (பாட்டா )மூன்று மதிப்புமிக்க பயண  விருதுகளைக் கேரள சுற்றுலாத் துறை வென்றுள்ளதுஇந்தியச் சுற்றுலாத் துறை ஒரு விருதை பெற்றுள்ளதுகடந்த 19-ம் தேதி, கஜகஸ்தான்  நாட்டின்  நூறுசுல்தான்(ஆஸ்தான) நகரத்தில் நடைபெற்ற பாட்டா டிராவல் மார்ட் 2019 விழாவில் கேரள சுற்றுலாத்துறைக்கு பாட்டா 3 தங்க விருதுகளை வழங்கி கவுரவித்தது.
விருதுகளை கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன், கேரளா சுற்றுலா இயக்குநர் பாலா கிரண் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

 

இம்மூன்று விருதுகளில் ஒரு விருது குமரக்கோமில் பாரம்பரிய உணவகத்தை நடத்தி வரும் பெண்ணிற்கும், 2 விருதுகள் கம் அவுட் & ப்ளே (come out & play) என்னும் கேரள சுற்றுலாவின் விளம்பர பிரச்சாரத்திற்கும், பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்ட கேரள சுற்றுலாத் துறை இணையதளத்திற்கும் வழங்கப்பட்டது
 

இதுகுறித்து அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன், ”இந்த விருதுகள் கேரள சுற்றுலாத் துறைக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையைக் கேரள மாநிலம் பெறும். குமரக்கோமில் உணவகத்தை நடத்தி வந்த பெண்ணிற்கு விருது கிடைத்தது பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறதுஎன்றார்சுற்றுலா இயக்குநர் பாலா கிரண் கூறியதாவது, இந்த ஆண்டில் அதிகமான பாட்டா விருதுகளை கேரள சுற்றுலாத் துறை வென்றுள்ளது. இந்த விருது எங்கள் இலக்குகளை ஊக்குவிக்கவும்  கேரளாவை விரும்பத்தக்க இடமாக உயர்த்தவும் உதவும்எனக் கூறினார்.

கடந்த ஆண்டு கேரள சுற்றுலாத் துறை  வளைகுடா நாடுகளில் எல்லாம் கேரள அச்சு ஊடக பிரச்சாரத்தை மேற்கொண்டது. அதற்காக  இரண்டு பாட்டா தங்க விருதுகளைப் பெற்றதுஇந்த ஆண்டின் பாட்டா விருதுகள் உலகளவில் 78 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து 197 பதிவுகளை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.