×

தொப்பையை குறைக்கணுமா? அப்போ மொதல்ல அதுல போடுற குப்பையை குறையுங்க!?

இன்றைய நவநாகரீக சூழலில் துரித உணவுகளின் பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விளைவு ஒபிசிட்டி இன்றைய நவநாகரீக சூழலில் துரித உணவுகளின் பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விளைவு ஒபிசிட்டி. உடல் எடையைச் சிலர் குறைக்கவும் சிலர் கூட்டவும் படாதபாடுப்படுகிறார்கள். ஆனால் நாம் இன்று பார்க்க இருப்பது உடல் எடையை குறைப்பதைப் பற்றி தான். சிலர் எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்தாலும், டயட் உணவைப் பின்பற்றினாலும் அவர்களுக்கு உடல் எடை குறையவே குறையாது. அதற்கு முக்கிய காரணம் நாம் எடுத்து கொள்ளும் உணவு
 

இன்றைய நவநாகரீக சூழலில் துரித உணவுகளின் பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விளைவு ஒபிசிட்டி

இன்றைய நவநாகரீக சூழலில் துரித உணவுகளின் பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விளைவு ஒபிசிட்டி. உடல் எடையைச் சிலர் குறைக்கவும் சிலர் கூட்டவும்  படாதபாடுப்படுகிறார்கள். ஆனால்  நாம் இன்று பார்க்க இருப்பது உடல் எடையை குறைப்பதைப் பற்றி தான். சிலர் எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்தாலும், டயட் உணவைப் பின்பற்றினாலும் அவர்களுக்கு உடல் எடை குறையவே குறையாது.

அதற்கு முக்கிய காரணம்  நாம் எடுத்து கொள்ளும் உணவு முறைதான். சாப்பிட சுவையாக இருப்பதால்  நாம் வெட்டி வீசும் நொறுக்குத் தீனி தான் இந்த உடல்பருமனுக்கு முக்கிய  காரணம். சீஸி ஃப்ரை, சீஸ் கேக், பர்கர், பட்டர் பாப்கான், சமோசா, ஜிலேபி போன்றவை உடலில் சத்துக்களை ஏற்றுகிறதோ இல்லையோ, உடல் எடையை அதிகரிக்கும். இந்த உணவுகளினால்  எந்த ஆரோக்கியமும் நமக்கு கிடைக்கப் போவதில்லை.  மாறாக நமக்குத் தொந்தி வயிறு தான் கிடைக்கும். அதனால் முடிந்த அளவிற்குச் சத்தே கிடைக்காத, இது போன்ற துரித உணவுகளை நாம்  தவிர்ப்பது நல்லது.

மாறாக காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.அதே சமயம் மூன்று வேளையும் வயிறு நிறைய சாப்பிடாமல், ஆறு வேளையாகப் பிரித்துச் சாப்பிடலாம். சோடா மற்றும் ஹெல்த் ட்ரிங்ஸுக்கு பதிலாக நிறையத் தண்ணீர் குடிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். தண்ணீரானது,  உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றி நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும். 

இது மட்டுமின்றி எட்டு மணி நேர உறக்கம், தினசரி உடற்பயிற்சி எனத் தவறாமல் செய்து வந்தால் தொப்பை குறைந்து தட்டையான வயிற்றைப் பெறலாம்.