×

தெரிந்தவர்களின் முகம் பாலியல் உணர்வோடு மனதில் வந்து போவதை தடுக்க என்ன வழி? வாசகரின் கேள்விக்கு உளவியலாளர் குமரன் குமணனின் பதில்

உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்கும் ஒரு தீர்வு சொல்லட்டா #Friends-ல் உளவியலாளர் குமரன் குமணன் வாசகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். சென்னை: உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்கும் ஒரு தீர்வு சொல்லட்டா #Friends-ல் உளவியலாளர் குமரன் குமணன் வாசகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். கேள்வி: அடிக்கடி எனக்கு தெரிந்த நபர்களின் முகம், பாலியல் உணர்வுகளோடு மனதில் வந்து போகிறது. அது தவறு என்று தெரிந்தாலும், எண்ணங்களை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. குற்ற உணர்ச்சி என்னை உறுத்துகிறது. என்ன
 

உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்கும் ஒரு தீர்வு சொல்லட்டா #Friends-ல் உளவியலாளர் குமரன் குமணன் வாசகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

சென்னை: உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்கும் ஒரு தீர்வு சொல்லட்டா #Friends-ல் உளவியலாளர் குமரன் குமணன் வாசகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

கேள்வி: அடிக்கடி எனக்கு தெரிந்த நபர்களின் முகம், பாலியல் உணர்வுகளோடு மனதில் வந்து போகிறது. அது தவறு என்று தெரிந்தாலும், எண்ணங்களை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. குற்ற உணர்ச்சி என்னை உறுத்துகிறது. என்ன செய்வது என சொல்லுங்கள் பிரெண்ட்.

பதில் : நியாயமான உணர்வுகளுக்கு என்றும் மதிப்பு உண்டு .உங்கள் எண்ணம் தவறு என்று தெரிந்த உடனே ,குற்ற உணர்ச்சியை முன்வைத்து கேள்வி எழுப்புதல் பாராட்டுக்கு உரிய செயல். தெரிந்தவர்கள் என்று சொல்லின் உட்பொருள் என்ன ,அந்த நபர்கள் உங்களுக்கு எப்படிப்பட்டவர்கள் என்று விளக்க முடியாத சூழலில் நீங்கள் தற்போது இருக்கவே வாய்ப்பு அதிகம் என நினைக்கிறேன் .

பொதுவாக இவ்வாறான சூழல்களில் பரிச்சயமில்லாத முகங்கள் புலப்படலாம் அவை நம்மை கவரலாம் .ஓர் அளவோடு நின்றுவிட்டால் எதிலும் சிக்கல் இல்லை . ஆனால் தெரிந்தவர்கள் என சொல்லும் பொழுது அதன் பின்புலத்தில் உள்ள விஷயம் மிக ஆபத்தானதாக மாறலாம்.

இன்னொரு விஷயமாக ,உங்களுக்கு யார் மீதாவது ஈர்ப்போ ,காதலோ இருக்கிறதா? இல்லையா? என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை .ஒரு வேளை அப்படி ஏதேனும் இருக்குமானால் நேரடியாக அந்த நபரிடம் வெளிப்படுத்தி விடுங்கள் .அப்படி செய்யாமல் இருப்பதால் கூட இப்படிப்பட்ட எண்ணங்கள் வரலாம் .

எண்ணம் எண்ணமாக மட்டுமே இருக்கும்போதே கேள்வி எழுந்தது ஒரு நல்ல அறிகுறி .இதனை மறுக்கும் அல்லது மறுக்கும் மனதில் எண்ணமே நிலையாகி ,பின் நோயாகி ,பின் ஆளுமையையே சிதைத்து போட்ட கதைகள் ஆயிரம் ஆயிரம் உண்டு .உறுத்தலை தவிர்த்திட தற்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணிகளில் கவனம் செலுத்தவும் . கூடுதலாக , வாசிப்பு பழக்கமும் இசையும்  நிற்கும் கருவிகளாக இருக்கட்டும் .

ஜயங்கள் நீக்கி  தெளிவு பெற முயலுங்கள் .வெல்வோம்