×

கண்களை கவரும் குல்லு தசரா திருவிழா

தசரா திருவிழா நவராத்திரி திருவிழா, விஜயதசமி, துர்கா பூஜை, பத்துகம்மா பண்டுக்கா,ராம்லீலா, குல்லு தசரா என்று வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு விதங்களில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஹிமாச்சல பிரதேசத்தில் கொண்டாடப்படும் குல்லு தசரா சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. தசரா திருவிழா நவராத்திரி திருவிழா, விஜயதசமி, துர்கா பூஜை, பத்துகம்மா பண்டுக்கா,ராம்லீலா, குல்லு தசரா என்று வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு விதங்களில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், மைசூரில் கொண்டாடப்படும் தசரா மிகவும்
 

தசரா திருவிழா நவராத்திரி திருவிழா, விஜயதசமி, துர்கா பூஜை, பத்துகம்மா பண்டுக்கா,ராம்லீலா, குல்லு தசரா என்று வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு விதங்களில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஹிமாச்சல பிரதேசத்தில் கொண்டாடப்படும் குல்லு தசரா சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. 

தசரா திருவிழா நவராத்திரி திருவிழா, விஜயதசமி, துர்கா பூஜை, பத்துகம்மா பண்டுக்கா,ராம்லீலா, குல்லு தசரா என்று வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு விதங்களில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், மைசூரில் கொண்டாடப்படும் தசரா மிகவும் பிரபலமானது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் கொண்டாடப்படும் குல்லு தசரா வித்தியாசமானது.
தமிழகத்தில் தசரா

தமிழகத்தில் தசரா நவராத்திரி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக குலசேகரப்பட்டனத்தில் கொண்டாடப்படும் தசரா பிரசித்தி பெற்றது
பெண் தெய்வங்களைப் போற்றும் விழா என்பதால் நவராத்திரியின் போது 3 நாட்கள் துர்கையையும், 3 நாட்கள் லட்சுமியையும், 3 நாட்கள் சரஸ்வதியையும் மக்கள் வழிப்படுகின்றனர். மேலும், தங்கள் வேண்டுதல் நிறைவேற விரதமிருந்து காளி, துர்கை உள்ளிட்ட பெண் கடவுளின் வேடங்களை அணிந்து, நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.
குல்லு தசரா
இந்த ஆண்டு, அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி  தொடங்கும் தசரா திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.  அனைத்து மாநிலங்களிலும் தசரா திருவிழா 10-வது நாளில் முடியும். ஆனால், ஹிமாச்சல பிரதேசத்தில் குல்லு தசரா சற்று வித்தியாசமாக 10-வது நாள் தொடங்கி ஒருவாரம் வரை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். வித்தியாசமாக கொண்டாடப்படும் இந்த தசரா சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. 

ஸ்ரீ ராமர் ராவணனை வென்று அயோத்திக்கு திரும்பிய வெற்றியை போற்றும் விதமாக தசரா விழாவை அம்மாநில மக்கள் கொண்டாடி வருகின்றனர்.  
தசராவின் போது, கோயில் சிற்பங்களை ஊர்வலமாக எடுத்துச்செல்லும் காட்சியும்  பக்தர்கள் கடவுள் வேடமிட்டு நடனமாடும் காட்சியும் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.
தீமையை அழித்து நன்மையே வெல்லும்

“தீமையை அழித்து நன்மையே வெல்லும்” என்பதை குறிக்கும் வகையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராவண வதம் நடக்கும். அப்போது, ராவணனின் உருவ பொம்மையை எரித்து மக்கள் கொண்டாடுவார்கள்.
இது தவிர, பாரம்பரிய நடனங்கள், வித்தைகள், நாடகங்கள் என்று வெகு விமர்சையாக நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.  இவை அனைத்தும் குல்லுவில் உள்ள தால்பூர் மைதானத்தில் நடத்தப்படும். 
எனவே, சுற்றுலாப் பயணிகள் இங்கு நடக்கும்  தசரா விழாவைக் காண வேண்டியது அவசியம்.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக சர்வதேச நாட்டுப்புற நடன விழாவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. விழாவில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடனகுழுவினர் குல்லு மணலிக்கு வருகை தருவார்கள். பல்வேறு நகரங்களிலிருந்து கைவினை கலைஞர்கள் , வர்த்தகர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.