×

எப்போதும் தோன்றும் எதிர்மறை சிந்தனையில் இருந்து நேர்மறை சிந்தனைக்கு மாறுவது எப்படி? வாசகரின் கேள்விக்கு உளவியலாளர் குமரன் குமணனின் பதில்

உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்கும் ஒரு தீர்வு சொல்லட்டா #Friends-ல் உளவியலாளர் குமரன் குமணன் வாசகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். சென்னை: உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்கும் ஒரு தீர்வு சொல்லட்டா #Friends-ல் உளவியலாளர் குமரன் குமணன் வாசகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அனைவருக்கும் பெரிய தலைவலியாக இருக்கும் உளவியல் பிரச்னையை தீர்ப்பதற்காக டாப் தமிழ் நியூஸ் செய்தி நிறுவனம் ‘ஒரு தீர்வு சொல்லட்டா #Friends’ என்ற வாசகர்கள் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் உளவியலாளர்
 

உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்கும் ஒரு தீர்வு சொல்லட்டா #Friends-ல் உளவியலாளர் குமரன் குமணன் வாசகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

சென்னை: உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்கும் ஒரு தீர்வு சொல்லட்டா #Friends-ல் உளவியலாளர் குமரன் குமணன் வாசகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அனைவருக்கும் பெரிய தலைவலியாக இருக்கும் உளவியல் பிரச்னையை தீர்ப்பதற்காக டாப் தமிழ் நியூஸ் செய்தி நிறுவனம் ‘ஒரு தீர்வு சொல்லட்டா #Friends’ என்ற வாசகர்கள் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் உளவியலாளர் குமரன் குமணன் வாரா வாரம் வாசகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

அந்த வகையில் நேயர் கேட்ட இந்த வார கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் பின்வருமாறு:

கேள்வி: எல்லா விஷயங்களிலும்  எதிர்மறையான எண்ணங்கள் எப்போதும் தோன்றிக் கொண்டே உள்ளது. நேர்மறையான சிந்தனைகள் வருவதில்லை.

பதில்: இந்த கேள்விய படிச்ச பிறகு எனக்கு இப்போ என்ன தோணுதுன்னா, இப்படி ஒரு எண்ணத்துக்கு காரணமே உங்களுக்குள்ள இருக்குற நினைவுகள் அடிப்படையில தான்னு சொல்வேன். அதாவது ..நம்ம வாழ்க்கைல நிறைய விஷயம் நடக்கும்.பல பேர் பல விதமா பேசுறதையும் புரிஞ்சுக்குறதையும் நாமே நேரடியா பார்ப்போம்,இல்லைன்னா வெளியே இருந்து தெரிய வரும் .

இதெல்லாம் நம்ம மனசுல தாக்கத்தை உண்டாக்கும்தான்..இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனா, எந்தெந்த விஷயங்களுக்கு நாம எந்த அளவுக்க முக்கியத்துவம் கொடுக்கிறோம் . அதுலதான் இருக்கு விஷயம் .

உதாரணத்துக்கு, ஒரு நல்ல friend இருக்காரு உங்களுக்கு …நல்லா போயிட்டு இருக்குற நட்புல ஒரு நாள் பெரிய பிரச்னை வந்து, அது வரைக்கும் நடந்த சின்ன சின்ன விஷயங்களை கூட பெரிசா காட்டிடும் .இப்போ இங்கே ,அதுக்கு முன்னாடி இருந்த நல்ல நினைவுகள் பெருசா? இல்ல அந்த ஒரு நாளோட சண்டை பெருசா? என முடிவடுக்க வேண்டிய நிலை வரும் ..

அந்த சமயத்துல நீங்க எடுக்கும் முடிவு ..உங்க நினைவுகளை வெச்சே அமையும்னு நம்புறேன் நான். அந்த வகையில பார்த்தா ஒரு விஷயமோ முயற்சியோ, அது சம்பந்தமா அதுக்கு முன்னாடி நடந்த நல்ல விஷயங்களை வரிசைப்படுத்தி சிந்திச்சு பலப்படுத்தி வைக்க மனச பழக்கப்படுத்தி வைங்க .. ஆரம்பத்துல கஷ்டமா இருக்கிறது மாதிரி தெரிந்தாலும் ..பின்னாடி இந்த வித்தை ரெண்டு விதமா கை கொடுக்கும் .

1. சூழ்நிலைகளை தாண்டி ஒரு விஷயத்துல நம்மளை தக்க வைச்சுக்க

2.அப்படி அது நல்ல சூழலா இல்லைன்னா அதுலேர்ந்து நாம பெரிய வலியில்லாம  வெளியேற 

ரெண்டு பக்கமும் லாபம் நமக்கு தான், Try பண்ணுங்க ..life நல்லா இருக்கும் .

வாழ்த்துகள்… வெல்வோம்.