×

என்ன செய்தாலும் இத விட முடியவில்லையா?

நம்மில் நிறைய பேர், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என ஜிம்முக்கும், பிட்னெஸ் செண்டருக்கும் அலைவார்கள். நம்மில் நிறைய பேர், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என ஜிம்முக்கும், பிட்னெஸ் செண்டருக்கும் அலைவார்கள். சிலர் வியர்வை சிந்த உடற்பயிற்சி செய்வார்கள். ஆனால், அதன் மூலம் கிடைக்கும் பலன்களையெல்லாம், தங்களது நொறுக்குத்தீனி பழக்கத்தால் இழந்தும் விடுவார்கள். என்ன செய்தாலும் நொறுக்குத்தீனி பழக்கத்தை விட முடியவில்லை என ஏங்குபவர்களுக்காக தான் இந்த பதிவு நேரம் கெட்ட வேளையில்
 

நம்மில் நிறைய பேர், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என ஜிம்முக்கும், பிட்னெஸ் செண்டருக்கும் அலைவார்கள்.

நம்மில் நிறைய பேர், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என ஜிம்முக்கும், பிட்னெஸ் செண்டருக்கும் அலைவார்கள். சிலர் வியர்வை சிந்த உடற்பயிற்சி செய்வார்கள். ஆனால், அதன் மூலம் கிடைக்கும் பலன்களையெல்லாம், தங்களது நொறுக்குத்தீனி பழக்கத்தால் இழந்தும் விடுவார்கள். என்ன செய்தாலும் நொறுக்குத்தீனி பழக்கத்தை விட முடியவில்லை என ஏங்குபவர்களுக்காக தான் இந்த பதிவு

நேரம் கெட்ட வேளையில் உங்களுக்கு பசி எடுத்தால் நீங்கள் போதிய அளவு நீர் குடிக்கவில்லை என்று அர்த்தம். எனவே, தினமும் அதிகமாக தண்ணீர் குடிக்கும் பழக்கத்துக்கு வாருங்கள். இதனால் எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிடும் ஆசை வராது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆரோக்கியமான சரிவிகித உணவு கலந்த உணவுப்பழக்கம், காலை உணவைக் கட்டாயம் சாப்பிடுவது, நேரத்துக்கு உணவை உண்பது போன்றவை நொறுக்குத்தீனிகளின் தேவையைக் குறைக்கும்.

 சாப்பிடும் நேரத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள். இனிமையான இசையை கேட்டுக் கொண்டே சாப்பிடலாம். அல்லது மகிழ்ச்சியாக உங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்தபடி சாப்பிடுங்கள்.

வாயில் எதையாவது அரைத்துகொண்டே இருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள், பொட்டுக்கடலை, பொரி, பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளைச் சாப்பிடலாம்.

உணவைப் பார்த்தால் உடனே சுவைக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவது வழக்கமே. ஆனால், அதை தவறு எனக் கருத வேண்டாம், ஆனால், அந்த உணர்வைக் கட்டுப்படுத்த முயல வேண்டும். கூடுமானவரை, ஸ்நாக்ஸ், பேக்கரி இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.

மாலை வேளைகளில் சுண்டல், பயறு வகைகள், முளைகட்டிய பயறுகள் போன்றவற்றைச் சாப்பிடலாம். நொறுக்குத்தீனிக்குப் பதில் ஃபுரூட் சாலட் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

 

யோகா மூலம் மனம் கட்டுப்பாடு அடைகிறது எனக் கருதுபவர்கள், யோகா போன்றவற்றை செய்து, மனதைக் கட்டுக்குள் வைக்கலாம்.