×

உடல் பித்தத்தை தணிக்கும் முறை

பித்தம், வாதம், கபம் இம்மூன்றும் அளவிற்கு அதிகமாக உடலில் இருக்கக் கூடாது. இவற்றில் எதுவொன்று அளவை மீறினாலும், நோய்கள் எட்டிப் பார்த்து, ஹலோ சொல்லி சிரிக்கும். அதனால், நமது உணவு முறைகளிலேயே இவற்றை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சிலருக்கு இயல்பிலேயே பித்த உடல்வாகு இருக்கலாம். அவர்கள் தொடர்ச்சியாக ஏதேனும் ஒரு கிழமையைத் தேர்ந்தெடுத்து, பித்தத்தைக் குறைக்கும் உணவு வகைகளை உட்கொண்டு வரலாம். நல்ல தீர்வு கிடைக்கும். பித்தம், வாதம், கபம் இம்மூன்றும் அளவிற்கு அதிகமாக உடலில் இருக்கக்
 
பித்தம், வாதம், கபம் இம்மூன்றும் அளவிற்கு அதிகமாக உடலில் இருக்கக் கூடாது. இவற்றில் எதுவொன்று அளவை மீறினாலும், நோய்கள் எட்டிப் பார்த்து, ஹலோ சொல்லி சிரிக்கும். 
அதனால், நமது உணவு முறைகளிலேயே இவற்றை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சிலருக்கு இயல்பிலேயே பித்த உடல்வாகு இருக்கலாம். அவர்கள் தொடர்ச்சியாக ஏதேனும் ஒரு கிழமையைத் தேர்ந்தெடுத்து, பித்தத்தைக் குறைக்கும் உணவு வகைகளை உட்கொண்டு வரலாம். நல்ல தீர்வு கிடைக்கும்.

தேன், இஞ்சி சாறு கலந்து தினமும் காலையில், வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பித்தம் தணியும். 
மஞ்சள் அல்லது வெள்ளை கரிசலாங்கண்ணி இலைகளை எடுத்து, சாறு பிழிந்து, அந்த சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து, நீர் வற்ற காய்ச்சி தலை முதல் பாதம் வரை தேய்த்து குளித்து வந்தால், உடலில் உள்ள பித்தம் குறையும்.
உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் பித்தம் குறையும். நெய்க்கு பித்தத்தைக் குறைக்கும் சக்தி உண்டு. நெய் சேர்க்கும் போது, உடல் பருமன், பிற உடல் உபாதைகள் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளாவும்.
எலுமிச்சையின் இலைகளை, புளிக்காத மோரில் ஊற வைத்து, அந்த மோரை உணவில் சேர்த்து பயன்படுத்தி வந்தாலும் பித்தம் குறையும். இப்படிச் செய்து வந்தால், பித்தத்தால் ஏற்படும் உடல் சூடும் தணியும்.
மாம்பழத்தை, சாறு பிழிந்து, அந்த சாற்றை அடுப்பிலேற்றி லேசாக சூடேற்றி, ஆற வைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.