×

உடல் பருமனை குறைக்கணுமா? அப்போ இந்த ஆம்லெட் சாப்பிடுங்க!

உடல் எடையை குறைக்க எத்தனையோ விதமான டயட்டுகள் உருவாகிவிட்டன. உடல் எடையை குறைக்க எத்தனையோ விதமான டயட்டுகள் உருவாகிவிட்டன. அந்த வகையில் கீடோ டயட் பிரபலமாகி வருகிறது. கீடோ டயட் என்றால் மிக குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகப்படியான கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்வதாகும். கார்போஹைட்ரேட் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகம் கொடுக்கக் கூடாது. அதே சமயம் அதிக கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்வதின் மூலம் ஏற்கனவே உடலில் உள்ள கொழுப்புகளை எரித்து உடல்
 

உடல் எடையை குறைக்க எத்தனையோ விதமான டயட்டுகள் உருவாகிவிட்டன.  

உடல் எடையை குறைக்க எத்தனையோ விதமான டயட்டுகள் உருவாகிவிட்டன.  அந்த வகையில்  கீடோ டயட் பிரபலமாகி வருகிறது.  கீடோ டயட் என்றால்  மிக குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகப்படியான கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்வதாகும். கார்போஹைட்ரேட் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகம் கொடுக்கக் கூடாது. அதே சமயம் அதிக கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்வதின் மூலம் ஏற்கனவே உடலில் உள்ள கொழுப்புகளை எரித்து உடல் எடையைக் குறைக்க இந்த டயட் பயன்படுவதாக கூறப்படுகிறது. 

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக் கொள்வதின் மூலம் நீண்ட நேரம் நாம் வேறு உணவை எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியும். அதனால் உடலில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாட்டோடு இருக்கும். 

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்து கொள்வதால் உடலில் இன்சூலின் அதிகம் சுரக்கும். இதனால் நீங்கள் விரைவில் சோர்ந்து விடுவீர்கள். கொழுப்பு நிறைந்த உணவைச் சேர்ந்து உட்கொள்வதின்  மூலம் சுறுசுறுப்பு கிடைப்பதாக இந்த டயட்டில் கூறப்படுகிறது. கொழுப்பு உணவுகளை மிகக் குறைந்த அளவு உண்பதால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மூளை குறைபாடு ஆகியவை ஏற்படும். 

குறிப்பாக நல்ல கொழுப்புகள் குடலை பாதுகாக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. 
இன்னும் சொல்லப்போனால் கீடோ டயட்டில் ஆம்லெட் மூலமாக கூட நீங்கள் உங்கள் உடல் எடையி குறைக்கலாம்.

அதவது சீஸ், முட்டை, வெங்காயம் இந்த மூன்றும் சேர்த்துத் தயாரிக்கும் ஆம்லெட்டில் கூடுதல் புரத சத்தும், அதே சமயம் கொழுப்பும் கிடைக்கும். இதன் மூலமாக கூட உங்கள் எடையை குறைக்க முடியும் என்று கூறுகிறார்கள் கீடோ டயட் வாசிகள்.