×

உடல் எடையைக் குறைக்க உதவும் டீடாக்ஸ் டிரிங்க்ஸ்!

நம்முடைய உடலில் தினமும் நச்சுக்கள் சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அவற்றை வெளியேற்ற நம்முடைய உடல் போராடுகிறது. நம்முடைய வாழ்க்கை முறை மாறிவிட்டதாலும், சரியான நேரத்துக்கு சாப்பிடாதது, அதிக மசாலா, கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடலில் நச்சுக்கள் சேர்ந்துகொண்டே இருக்கின்றன. நம்முடைய உடலில் தினமும் நச்சுக்கள் சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அவற்றை வெளியேற்ற நம்முடைய உடல் போராடுகிறது. நம்முடைய வாழ்க்கை முறை மாறிவிட்டதாலும், சரியான நேரத்துக்கு சாப்பிடாதது, அதிக மசாலா, கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது,
 

நம்முடைய உடலில் தினமும் நச்சுக்கள் சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அவற்றை வெளியேற்ற நம்முடைய உடல் போராடுகிறது. நம்முடைய வாழ்க்கை முறை மாறிவிட்டதாலும், சரியான நேரத்துக்கு சாப்பிடாதது, அதிக மசாலா, கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடலில் நச்சுக்கள் சேர்ந்துகொண்டே இருக்கின்றன.

நம்முடைய உடலில் தினமும் நச்சுக்கள் சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அவற்றை வெளியேற்ற நம்முடைய உடல் போராடுகிறது. நம்முடைய வாழ்க்கை முறை மாறிவிட்டதாலும், சரியான நேரத்துக்கு சாப்பிடாதது, அதிக மசாலா, கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடலில் நச்சுக்கள் சேர்ந்துகொண்டே இருக்கின்றன.
உடலில் நச்சுக்கள் சேரும்போது நோய்கள் ஏற்படுகின்றன. அந்த காலத்தில் பஞ்சகர்மா, எனிமா, மசாஜ், பத்தியம், விரதம் என்று உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால், இன்றைக்கு அந்த பழைய முறைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. இன்றைக்கு மாறிவிட்ட சூழ்நிலையில் விரதம் கூட பலரால் இருக்க முடியவில்லை… இதில் எங்கிருந்து வாந்தி, எனிமா கொடுத்து வயிற்றை சுத்தப்படுத்துதல் போன்றவற்றை செய்ய முடியும். இதற்காக வந்திருக்கும் முறைதான் டீடாக்ஸ் டிரிங்க்ஸ்… இதை கடையில் வாங்க முடியாது. வீட்டிலேயே எளிதாக செய்துகொள்ளலாம்…

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சியோடு, தண்ணீரில் புதினா இலைகள், வெள்ளரி, இஞ்சித் துண்டு, ஆரஞ்சு சுளை சேர்த்து அருந்தினாலே போதும். இந்த கூட்டணி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். இந்த டீடாக்ஸ் டிரிங்ஸை மட்டும் குடித்தால் போதும் உடல் எடை குறைந்துவிடும் என்று கூறவில்லை. உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாட்டுடன் வழக்கமான தண்ணீர் பாட்டலில் புதினா, வெள்ளரி, இஞ்சி, ஆரஞ்சு சுளையைப் போட்டு குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற, கொழுப்பைக் கரைக்க உதவும் என்று மட்டுமே இயற்கை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகாவுக்குப் பிறகு தொடர்ந்து இந்த டீடாக்ஸ் தண்ணீரை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறையும், தொப்பை குறையும். உடலும் ஃபிரெஷ்ஷாக இருக்கும்.