×

உங்களுக்கே தெரியாமல் கலக்கப்படும் பிளாஸ்டிக்: மக்களே உஷார்!

நாம் உபயோகிக்கும் பொருள்களில் பிளாஸ்டிக் நமக்கு தெரியாமலே கலக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் தடை விதித்து அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பொதுமக்களும் தங்களால் முடிந்த அளவிற்கு பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைத்து வருகின்றனர். இருப்பினும் நாள்தோறும் நாம் உபயோகிக்கும் பொருள்களில் பிளாஸ்டிக் நமக்கு தெரியாமலே கலக்கப்பட்டு வருகிறது. ஈரமான வைப்ஸ் : முகத்தை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஈரமான வைப்ஸில் பிளாஸ்டிக் பயன்படுத்தப் படுகிறது. இதனால் பஞ்சுகளை பயன்படுத்துவது நல்லது. சானிடரி பேட்ஸ் : 90 சதவீதம்
 

நாம் உபயோகிக்கும் பொருள்களில் பிளாஸ்டிக் நமக்கு தெரியாமலே கலக்கப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் தடை விதித்து அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பொதுமக்களும் தங்களால் முடிந்த அளவிற்கு பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைத்து  வருகின்றனர். இருப்பினும் நாள்தோறும் நாம் உபயோகிக்கும் பொருள்களில் பிளாஸ்டிக் நமக்கு தெரியாமலே கலக்கப்பட்டு வருகிறது.

ஈரமான வைப்ஸ் : 

முகத்தை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஈரமான வைப்ஸில் பிளாஸ்டிக் பயன்படுத்தப் படுகிறது. இதனால் பஞ்சுகளை  பயன்படுத்துவது நல்லது.

சானிடரி பேட்ஸ் : 

 90 சதவீதம் பிளாஸ்டிக்கின் உதவியால் தான் சானிடரி நாப்கின்கள்  தயாரிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லாத நாப்கின்களை  பயன்படுத்தலாம்.

டீ பேக் : 

டீ  பேக்கில் பிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்படுகின்றன. அவற்றை நாம் உபயோகித்தபின் தூக்கி வீசுவதின் மூலம்,  11.6 பில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் 3.1 பில்லியன் நானோ பிளாஸ்டிக்கை உற்பத்தியாகிறதாம்.

சுவிங் கம் : 

சுவிங் கம் பாலிதிலீன் மற்றும் பாலிவினயல் அசிடேட் ஆகிய இரு மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.  இது இரண்டுமே பிளாஸ்டிக் துகள்களால் உருவானவை.

குளிர்பான அட்டை டப்பா  : 

குளிர்பானங்கள் கண்ணாடி   பாட்டில்களில்  இருந்து பிளாஸ்டிக் பாட்டில் தற்போது அட்டை டப்பாக்களில் விற்பனையாகிறது. உண்மையில் இதிலும்   20% பிளாஸ்டிக் துகள்கள்  கலக்கப்படுகின்றன. குளிர்பானம்  அட்டையில் ஊறி ஒழுகாமல் இருக்க இது பயன்படுத்தப்படுகிறது.