×

மலச்சிக்கலை போக்கி கொழுப்பு, எடையை குறைக்கும் சோம்பு ! உணவுக்குப்பின் சாப்பிட்டால் ஒழிந்து போகும் உடல் உபாதைகள் !

உணவில் சோம்பு இடம்பெறுவதால் என்ன பலன்? எதற்காக சிலர் உணவு சாப்பிட்ட உடன் சோம்பு சாப்பிடுகிறார்கள் என்பதை பார்ப்போம். உணவில் சோம்பு இடம்பெறுவதால் என்ன பலன்? எதற்காக சிலர் உணவு சாப்பிட்ட உடன் சோம்பு சாப்பிடுகிறார்கள் என்பதை பார்ப்போம். சோம்பு உணவின் சுவையைக் கூட்டுவதோடு, நல்ல மணத்தையும் கொடுக்கிறது. இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்களும் அடங்கியிருப்பதாக மருத்துவம் தெரிவிக்கிறது. பொதுவாக உணவு உண்டபின் சோம்பு சாப்பிடுவது வாய் புத்துணர்ச்சிக்காக என பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் சோம்பு உணவு
 

உணவில் சோம்பு இடம்பெறுவதால் என்ன பலன்? எதற்காக சிலர் உணவு சாப்பிட்ட உடன் சோம்பு சாப்பிடுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

உணவில் சோம்பு இடம்பெறுவதால் என்ன பலன்? எதற்காக சிலர் உணவு சாப்பிட்ட உடன் சோம்பு சாப்பிடுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

சோம்பு உணவின் சுவையைக் கூட்டுவதோடு, நல்ல மணத்தையும் கொடுக்கிறது. இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்களும் அடங்கியிருப்பதாக மருத்துவம் தெரிவிக்கிறது.

பொதுவாக உணவு உண்டபின் சோம்பு சாப்பிடுவது வாய் புத்துணர்ச்சிக்காக என பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் சோம்பு உணவு உண்ட பின் வாயில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்குவதோடு, உணவுக்கு பின் உடலில் நடைபெறும் சில செயல்பாடுகளுக்கும் உதவி புரிகிறது.

உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் திறனைக் கொண்ட சோம்புவால் அஜீரண கோளாறுகள் தடுக்கப்பட்டு, கொழுப்புக்களையும், எடையையும் கரைக்க உதவும். சோம்பு இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதோடு, இன்சுலின் உணர்திறனையும் அதிகரிக்கும். சோம்பு விதைகள் டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது

மேலும் இது வாயில் இருக்கும் எச்சில் சுரப்பியைத் தூண்டி, அதிகளவு எச்சிலை சுரக்க உதவும். சோம்பு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். சோம்பில் உள்ள பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதயத்திற்கு நன்மையளிக்கும்.

மேலும், உணவுகளை எளிதில் செரிமானம் செய்ய உதவுவதோடு மலச்சிக்கலை தடுத்து கழிவுகளை ஒன்று சேர்த்து வெளியேற்றும். இருப்பினும் சோம்பை அதிகமாக சாப்பிடக்கூடாது. சோம்பு உடலில் நீர்த்தேக்க பிரச்சனையை சரிசெய்ய உதவும். அதாவது சிறுநீர்ப்பெருக்கும் பண்புகள் உள்ளது. வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புச பிரச்சனையில் இருந்தும் விடுவிக்கும். மதிய உணவிற்கு பின் சோம்பை சாப்பிடுவதால், வயிற்று அசௌகரியத்தால் ஏற்படும் குமட்டல் பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.