×

இதை ஊற வச்சி காலையில சாப்பிட்டா ,எந்தெந்த நோயில்லாமல் வாழ வச்சி பார்க்கும் தெரியுமா ?

வேர்க்கடலை என்பது பலவிதமான சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான கடலை ஆகும் இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும். இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் இது சற்று அதிகமான கலோரிகளை கொண்டது. இருந்தாலும் உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேர்க்கடலை ஆனது பெரிதும் உதவுகிறது மற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடவதை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் நாம் வேர்க்கடலையை
 

வேர்க்கடலை என்பது பலவிதமான சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான கடலை ஆகும் இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும். இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் இது சற்று அதிகமான கலோரிகளை கொண்டது. இருந்தாலும் உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேர்க்கடலை ஆனது பெரிதும் உதவுகிறது மற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடவதை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் நாம் வேர்க்கடலையை பயன்படுத்தலாம்.பச்சையாக உப்பு போட்டு சாப்பிடலாம், வறுத்தும் சாப்பிடலாம், உப்புமா போன்று புதுவிதமான உணவுகளை செய்து சாப்பிடலாம் இன்னும் வேர்க்கடலை வைத்து பலவிதமான உணவு வகைகளும் செய்து சாப்பிடலாம். இது நமது மூளையின் சத்தையும் அதிகரிக்கிறது. ஆனால் நீங்கள் ஊரவைத்த வேர்க்கடலையை சாப்பிட்டு உள்ளீர்களா? அப்படி இல்லை என்றால் நீங்கள் அதை முயற்சி செய்து பார்க்கலாம். ஊறவைத்த வேர்கடலை பாதாம் பருப்புக்கு இணையான நன்மைகள் கொண்டது என்று பலரும் கூறுகின்றனர் அதைப்பற்றி தற்போது பார்க்கலாம்.

பீன்ஸ், பட்டாணி போன்ற தாவர வகையைச் சேர்ந்ததுதான் நிலக்கடலையும். இதனை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. கொழுப்பு, புரதம், பாஸ்பரஸ், தையாமின், நையாசின் ஆகிய ஐந்து சத்துக்கள் கொண்ட அற்புத மருத்துவக் குணத்துடன் விளங்குகிறது.

அதுமட்டுமின்றி வேர்க்கடலை உடலுக்கு அவசியமான இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இதனை தினமும் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிட இன்னும் பல நன்மைகள் உள்ளன.

வேர்க்கடலையின் இந்த கார்டியோ-பாதுகாப்பு பண்புகள் நீண்ட காலத்திற்கு இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது மற்றும் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இந்த வேர்கடலையானது மிகவும் நன்மை அளிக்கக்கூடியது என்று கூறுகின்றனர். மாரடைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து இது நம்மை காக்கும் என்று கூறுகின்றனர். இதில் அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்திருப்பதால் ரத்த ஓட்டம் இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகிறது. இதை கொஞ்சம் கொஞ்சமாக பல நாட்கள் உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.

நீங்கள் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், வெல்லத்துடன் வேர்க்கடலையை ஊறவைக்கவும். பின் அதை சாப்பிடுவதால் முதுகு வலியை போக்கும்..

வேர்க்கடலையில் பீட்டா-சிட்டோஸ்டெரால் நிரம்பியுள்ளது. புற்றுநோய் அபாயத்தை மிகப் பெரிய அளவில் குறைக்கிறது. உடலில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. குறிப்பாக மார்பக புற்றுநோய் ஆபத்தை தவிர்க்க உதவுகிறது.

வேர்க்கடலை புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவை உள்ளதால் வேர்க்கடலை நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் நீண்ட நேரம் நம்மை முழுமையாக வைத்திருக்கும். இது, அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்கிறது மற்றும் எடையை குறைக்க உதவுகிறது. அவற்றை அளவாகச் சாப்பிட்டால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும்.

வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், எரிச்சலூட்டும் குடல் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க உதவும். அதற்கு நீங்கள் தினமும் 6-7 வேர்க்கடலையை சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட செரிமானப் பிரச்னை ,குடல் அழற்சி பிரச்னை, மலச்சிக்கல் என வயிறு தொடர்பான பல பிரச்னைகளை தவிர்க்கலாம்.