×

பல நாள் பல் வலியை, வெறும் பத்து ரூபாயில் பத்தே நிமிஷத்தில் பறந்தோட செய்யும் வைத்தியம்

பல் வலி என்பது எல்லாருக்கும் தாங்க முடியாத வேதனையை அளிக்கக்கூடிய விஷயமாகும். பல்வலி வந்தால் அவ்வளவு சீக்கிரம் சாதாரணமாக நிற்காது. அதனால் தான் நிறைய மக்கள் வலியை தாங்க முடியாமல் பல்லை பிடுங்கி விடுவது உண்டு. ஆனால் இப்படி எத்தனை பற்களை பிடுங்குவீர்கள். பற்கள் மிகவும் முக்கியமான உறுப்பாகும். இவைகள் நம் உணவை ஜீரணிக்க நிறைய வகைகளில் உதவுகிறது. பல்வலி தாங்க முடியாமல் அடிக்கடி பற்களை பிடுங்குவது பின்னாளில் பற்களின் அமைப்பை மாற்ற வாய்ப்பு உள்ளது. கிராம்பு
 

பல் வலி என்பது எல்லாருக்கும் தாங்க முடியாத வேதனையை அளிக்கக்கூடிய விஷயமாகும். பல்வலி வந்தால் அவ்வளவு சீக்கிரம் சாதாரணமாக நிற்காது. அதனால் தான் நிறைய மக்கள் வலியை தாங்க முடியாமல் பல்லை பிடுங்கி விடுவது உண்டு. ஆனால் இப்படி எத்தனை பற்களை பிடுங்குவீர்கள். பற்கள் மிகவும் முக்கியமான உறுப்பாகும். இவைகள் நம் உணவை ஜீரணிக்க நிறைய வகைகளில் உதவுகிறது. பல்வலி தாங்க முடியாமல் அடிக்கடி பற்களை பிடுங்குவது பின்னாளில் பற்களின் அமைப்பை மாற்ற வாய்ப்பு உள்ளது.

  • கிராம்பு பற்களில் உள்ள நரம்புகள் உணர்ச்சி இழக்கவும் வலியில் இருந்து நிவாரணம் பெறவும் உதவுகிறது. நேரடியாக நாம் கிராம்பை வாயில் வைத்து மெல்லலாம். இதன் மூலம் அதன் எண்ணெயானது பற்களை போய் சேரும். அல்லது ஒரு பருத்தி பஞ்சில் கிராம்பு எண்ணெயை சில துளிகள் இட்டு அதை பல் வலிக்கும் இடத்தில் தேய்க்கலாம்.

  • பல் வலி ஏற்படும்போது உங்கள் வாயை வெது வெதுப்பான உப்பு நீரில் கழுவுதல் என்பது உங்களுக்கு நல்ல பலனளிக்கும்.

  • பல் வலிக்கு  ஐஸ் கட்டியை பயன்படுத்தலாம். ஐஸை ஒரு பேக்கில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். 15 நிமிடங்கள் இப்படி ஒத்தடம் கொடுக்கலாம். வலி மிகுந்த இடத்தில் ஐஸ் கட்டியை பயன்படுத்தும் போது அது வலியை குறைக்க உதவுகிறது. 

  • பூண்டை அரைத்து அதை பேஸ்ட் போல செய்து பற்களில் தடவி கொள்ளலாம். அல்லது பூண்டை வாயில் வைத்து கிராம்பு போலவே மெல்லலாம். அதிக பல் வலியை கொண்டவர்கள் பூண்டு எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் பயன்படுத்தலாம்.

  •  உங்கள் பற்களில் அல்லது ஈறுகளில் வலி ஏற்படும்போது சூடான புதினா தேநீர் அதற்கு நிவாராணம் அளிக்கலாம். இது உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வலியை குறைக்க உதவுகிறது.

  • பல்வலிக்கு ஒரு பருத்தி பஞ்சில் சில துளிகள் தைம் எண்ணெயை விட்டு அதில் சிறிது தண்ணீரையும் கலக்கவும். பிறகு வாயில் பாதிக்கப்பட்ட பகுதியில் அதை தடவவும். தைம் உங்கள் வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றவும் தொற்றுநோயை குறைக்கவும் உதவுகிறது.

துளசி

பல் வலி, பல் ஈறில் ரத்தம் வந்தால் துளசி 1 பிடி, தண்ணீரில் போட்டுக் கொதித்ததும் இறக்கி ஆற வைத்து வாய் கொப்பளிக்கவும். பிறகு 4 துளசி இலைகளை நன்றாக மென்று சாப்பிடவும். பல் வலி குறையும்.

பல் ஓட்டைக்கு

பல்லில் ஓட்டை இருந்து வலித்தால் 1 சிட்டிகை கிராம்பு பொடி, 1 சிட்டிகை பட்டை பொடி, 1 சிட்டிகை பெருங்காயத்தைச் சேர்த்துப் பல்லில் வைத்து அழுத்தி வைத்துக்கொண்டால் வலி குறைந்துவிடும். பொடியை வைத்து 5, 10 நிமிடங்கள் கழித்து வாய் கொப்பளிக்கவும்.

நல்லெண்ணெய்

தினம் 2 சொட்டு நல்லெண்ணெய் எடுத்துப் பல் ஈறின் மேல் நன்றாகப் படும்படி அழுத்தித் தேய்த்து வாய் கொப்பளித்தால் பல், ஈறுகள் பலப்படும்.

வெந்தயம்

இரவு 1 ஸ்பூன் வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பயோரியா எனப்படும் ஈறுநோய் சரியாகிவிடும்.

பல் வலிக்கு உப்பு நீர் சிறந்த சிகிச்சை அளிக்கிறது. வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து வாயை கொப்பளியுங்கள். இதை ஒரு நாளைக்கு 2-3 முறை என மீண்டும் செய்யலாம். இது பல்லில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது.

பல் வலிக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்து வரலாம். சிறிது துணியில் ஐஸ் கட்டிகளை எடுத்து பல்வலி ஏற்படும் இடத்தில் ஒத்தடம் கொடுத்து வரலாம். இது வலியை குறைக்க உதவி செய்யும்.