×

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க இந்தப் பழக்கங்கள் ரொம்ப முக்கியம்!

கொரோனா சூழ் உலகமாகி விட்டது. பல நாடுகளிலும் கொரோனா கட்டுக்குள் வைக்கமுடியாமல் புதிய நோயாளிகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றனர். கொரோனா தடுப்பூசி மட்டுமே நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் என்ற நிலைமையை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது. உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துவிட்டது என்றாலும், உலகம் முழுவதும் அது பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்பது தெரியாது. கொரோனா தொற்று நம்மைத் தாக்காது இருக்க செய்ய வேண்டியது நமது உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதே. நோய்
 

கொரோனா சூழ் உலகமாகி விட்டது. பல நாடுகளிலும் கொரோனா கட்டுக்குள் வைக்கமுடியாமல் புதிய நோயாளிகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி மட்டுமே நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் என்ற நிலைமையை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது. உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துவிட்டது என்றாலும், உலகம் முழுவதும் அது பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்பது தெரியாது.

கொரோனா தொற்று நம்மைத் தாக்காது இருக்க செய்ய வேண்டியது நமது உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதே. நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்திக் கொண்டால் கொரோனா நோய்த் தாக்கினாலும்கூட அதிக சிரமம் இல்லாமல் அதிலிருந்து மீள முடியும்.

எனவே நாம் நோய் எதிர்ப்புச் சக்திகளை அதிகரிக்கச் செய்யும் பழக்கங்களைத் தெரிந்து வைத்துக்கொள்வதும், முறையாக அவற்றைப் பின்பற்றுவதும் மிகவும் அவசியம். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஒன்று: சத்து மிகுந்த உணவுமுறைக்கு மாற வேண்டியது முதல் விஷயம். புரோட்டின் சத்துள்ள முட்டை, பருப்பு, கீரை வகைகளை சுழற்சி முறையில் நம் உணவில் இடம்பெற வேண்டும்.

சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, திராட்சை, சாத்துக்குடி போன்ற பழங்களைச் சாப்பிடுவது அல்லது பழரசமாகக் குடிக்க வேண்டும். இதனால், நம் உடலில் வைட்டமின் சி சத்து அதிகரிக்கும்.  

மேலும், சிறுதானியங்கள், க்ரீன் டீ, பப்பாளி, இறைச்சி உள்ளிட்டவற்றையும் அவ்வப்போது சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு: பலர் அதிகம் உடலுழைப்பு சாராத வேலைகளில் இருப்பதால், அவசியம் உடற்பயிற்சிகள் செய்வதை தினந்தோறும் கட்டாயப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தொடக்கத்தில் எளிதான உடற்பயிற்சிகளில் ஆரம்பித்து பின் உடலை வலுவாக்கும் கடினமான பயிற்சிக்குச் செல்வது நல்லது. யாரேனும் ஒரு உடற்பயிற்சி பயிற்சியாளரின் ஆலோசனையின்படி உடற்பயிற்சி செய்வது நல்லது.

மூன்று: உங்களின் உடல் உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ற உட பருமனைப் பராமரிக்க வேண்டும். ஏனெனில் அதிக உடல்பருமனே பல நோய்களை இழுத்து வந்துவிடும். அதனால், உடலில் தேவையற்ற கொழுப்புகளைச் சேர விடாமல் உடற்பயிற்சி செய்வது முக்கியம்.

நான்கு: உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றோடு மிகவும் முக்கியமானது சரியான நேரத்தில் தூங்கச் செல்வது. போதுமான நேரம் நிம்மதியாகத் தூங்குவது. எட்டு மணிநேர நிம்மதியான தூக்கத்தில் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேற்றுவதற்கான பணி சீராக நடக்கும். அவை வெளியேறிவிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதில் தடங்கள் இருக்காது.

ஐந்து: சில பழக்கங்களை நாம் கைக்கொள்ள வேண்டுமோ அதேபோல சில பழக்கங்களைக் கை விடுவது ரொம்பவே முக்கியம். குறிப்பாக, மது அருந்துவது. மது அருந்துவது உடல் நலத்தைக் கெடுக்கும் என்பதற்கு பெரிய அளவுக்கு விளக்கம் தேவையே இல்லை.

நம் உடலில் ஆல்கஹால் சேராதபடிப் பார்த்துக்கொள்வது நல்லது. குடிப் பழக்கம் உள்ளவர்கள், மெல்ல அதிலிருந்து வெளியேறுங்கள். அதற்குப் பதில் நல்ல பழவகைகளின் ஜூஸ்களைக் குடியுங்கள்.

மது பழக்கத்தைப் போலவே அதிக தீங்கு விளைவிப்பது புகைப் பழக்கம். நுரையீரலை நேரடியாகப் பாதிக்கக்கூடிய பழக்கம் இது. கொரோனாவின் பாதிப்பும் நுரையீரலுக்கு அதிகம் என்கிறார்கள். அதனால், புகைப் பழக்கம் உள்ளவர்கள் சிறிதும் யோசிக்காது அதனை விடுவது மிகவும் அவசியம்.