×

உடல் எடை குறைப்பை விரைவுபடுத்தும் பொட்டாசியம்!

தினசரி வைட்டமின், தாது உப்புக்கள் நிறைந்த ஊட்டச்சத்து உள்ள உணவை சாப்பிட்டு வந்தால் உடல் நலம் மேம்படும். உடல் எடை குறைந்த, ஃபிட் ஆகும். வாழ்நாள் அதிகரிக்கும். நம்முடைய உடல் ஆரோக்கியமாக இயங்க சில ஊட்டச்சத்துக்கள் அத்தியாவசியமாக தேவைப்படுகின்றன. நாம் சாப்பிடும் உணவில் இருந்து அந்த சத்துக்களை நம்முடைய உடல் கிரகித்துக்கொள்கிறது. அப்படியான ஒரு ஊட்டச்சத்துதான் பொட்டாசியம். எலெக்ட்ரோலைட்களின் ஒன்று பொட்டாசியம். ரத்த அழுத்தம் அளவு சரியான அளவில் பராமரிக்க பொட்டாசியம் தேவை. மேலும் உடற்பயிற்சிக்குப் பிறகு
 

தினசரி வைட்டமின், தாது உப்புக்கள் நிறைந்த ஊட்டச்சத்து உள்ள உணவை சாப்பிட்டு வந்தால் உடல் நலம் மேம்படும். உடல் எடை குறைந்த, ஃபிட் ஆகும். வாழ்நாள் அதிகரிக்கும். நம்முடைய உடல் ஆரோக்கியமாக இயங்க சில ஊட்டச்சத்துக்கள் அத்தியாவசியமாக தேவைப்படுகின்றன. நாம் சாப்பிடும் உணவில் இருந்து அந்த சத்துக்களை நம்முடைய உடல் கிரகித்துக்கொள்கிறது. அப்படியான ஒரு ஊட்டச்சத்துதான் பொட்டாசியம்.

எலெக்ட்ரோலைட்களின் ஒன்று பொட்டாசியம். ரத்த அழுத்தம் அளவு சரியான அளவில் பராமரிக்க பொட்டாசியம் தேவை. மேலும் உடற்பயிற்சிக்குப் பிறகு தசைகள் மிக விரைவாக இயல்புநிலைக்குத் திரும்ப பொட்டாசியம் அவசியம். இது உடல் எடை குறைப்பை விரைவுபடுத்தும். ஒரு நாளைக்கு 4700 மி.கி அளவுக்கு பொட்டாசியம் தேவை. நம் உடலில் உள்ள பொட்டாசியத்தில் 98 சதவிகிதம் செல்களுக்குள் உள்ளது. அதில் 80 சதவிகிதம் எலும்பு தசையில் உள்ளது. மீதி 20 சதவிகிதம் எலும்பு, ரத்த சிவப்பணு, கல்லீரலில் உள்ளது. தசைகள் சுருங்கி விரிவது, இதயம் துடிப்பது, உடலில் உள்ள நீர் சத்து சம நிலை பராமரிப்பது என்று பல்வேறு பணிகளுக்கு பொட்டாசியம் மிகவும் அவசியம்.

ஆரோக்கியமான நபர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள காய்கறி, பழங்களைச் சாப்பிட்டு வருவது அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக கல், ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

வாழைப் பழத்தில் மிக அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. அதனால்தான் சிறுநீரக செயலிழப்பால் அவதியுறும் நோயாளிகள் வாழைப்பழத்தை சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வாழைப் பழத்தில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது என்பதால் உடல் எடையை அதிகரிக்கும் என்று சொல்வார்கள். அதே நேரத்தில் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து உடல் எடை குறைக்க உதவும். எனவே தினமும் ஒன்று, இரண்டு என்ற அளவில் எடுப்பதில் தவறு இல்லை.

ஆளி விதையில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இதை ஸ்மூத்தியில் போட்டு அருந்தி வந்தால் உடல் எடை வேகமாகக் குறையும்.

பட்டர் ஃப்ரூட் எனப்படும் அவகேடோவில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இதுவும் எடையைக் குறைக்க உதவும்.

இளநீர் அருந்துவதன் மூலம் ஓரளவுக்கு உடலுக்கு தேவையான பொட்டாசியம் கிடைக்கும். இதில் மக்னீஷியம், கால்சியம், சோடியம், மாங்கனீசும் உள்ளது. இது கொழுப்பு வேகமாக கரையச் செய்யும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கிட்னி பீன்ஸ், கீரை போன்றவற்றிலும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. உடல் எடை குறைய உடற்பயிற்சி செய்பவர்கள் பயிற்சி முடிந்த பிறகு பொட்டாசியம் நிறைந்த இந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது!