×

வாழ்நாள் முழுவதும் டாக்டர் மூஞ்சியிலே முழிக்காமலிருக்க ,இதை படிக்காம விட்டுராதிங்க .

நோயின்றி வாழ்வதற்கான சில இரகசியங்களுள் ஒருசிலவற்றை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். அவை அனைத்தும் அன்றாடம் நாம் மேற்கொள்ளும் செயல்களாகத் தான் இருக்கும். ஆகவே அத்தகைய செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அதனை தினமும் பின்பற்றி, நோயின்றி வாழுங்கள். அடிக்கடி கை கழுவுவது சாப்பிடும் முன் மட்டும் தான் கைகளை கழுவ வேண்டும் என்பதில்லை. தினமும் அவ்வப்போது வெளியே சென்று வந்தாலோ அல்லது ஏதேனும் உணவுப் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து வைக்கும் போதெல்லாம்
 

நோயின்றி வாழ்வதற்கான சில இரகசியங்களுள் ஒருசிலவற்றை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். அவை அனைத்தும் அன்றாடம் நாம் மேற்கொள்ளும் செயல்களாகத் தான் இருக்கும். ஆகவே அத்தகைய செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அதனை தினமும் பின்பற்றி, நோயின்றி வாழுங்கள்.

அடிக்கடி கை கழுவுவது

சாப்பிடும் முன் மட்டும் தான் கைகளை கழுவ வேண்டும் என்பதில்லை. தினமும் அவ்வப்போது வெளியே சென்று வந்தாலோ அல்லது ஏதேனும் உணவுப் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து வைக்கும் போதெல்லாம் கைகளை கழுவ வேண்டும். இதனால் உடல் மற்றும் சருமத்தில் நோய்கள் வருவதைத் தவிர்க்கலாம்.

மூக்கில் விரல் வைப்பது

நிறைய பேருக்கு மூக்கில் விரலை வைத்து குடையும் பழக்கம் இருக்கும். இவ்வாறு அடிக்கடி மூக்கை நோண்டிக் கொண்டிருந்தால், அவையும் நிறைய கிருமிகளை மூக்கின் மூலம் உடலுக்கு செல்ல வழிவகுக்கும். எப்படியெனில் கண்ட பொருட்களை தொட்டுவிட்டு, பின் விரலை மூக்கில் வைத்தால், கிருமிகள் உள்ளே செல்லாதா?

நீட்டி மடக்கி உட்கார்தல்

எப்போதும் ஒரே நிலையில் உட்காராமல், அவ்வப்போது நீட்டி மடக்கி, நெளிந்து உட்கார வேண்டும். இதனால் நிறைய வலிகள், பிடிப்புக்கள் போன்றவற்றை தவிர்க்கலாம். சொல்லப்போனால் தினமும் காலையில் சிறிது நேரம் ஸ்ட்ரெட்ச்சிங் உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.

சரியாக சுவாசித்தல்

உடலை ஆரோக்கியத்துடன் வைப்பதில் சுவாச்சத்தலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் நுரையீரலானது நன்கு செயல்பட்டு, அதிகமான ஆக்ஸிஜன் உடலுக்கு கிடைத்து, உடலில் இரத்த ஓட்டமும், செயல்பாடும் அதிகரிக்கும்.

ஆரோக்கியமான காலை உணவு

தவறாமல் காலையில் சாப்பிட வேண்டும் அதிலும் நன்கு ஆரோக்கியமான உணவுகளை காலையில் உட்கொண்டால், உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும். எப்படியெனில் மற்ற நேரத்தில் சாப்பிடுவதை விட, காலையில் சாப்பிடுவதில் தான், ஒரு நாளைக்கு வேண்டிய சக்தியானது கிடைக்கும். அவ்வாறு காலை உணவை தவிர்த்தால், பின் அந்த நாளில் வேறு எப்போது சாப்பிட்டாலும், உடல் வலிமையிழந்து தான் இருக்கும்.

குளிப்பது

தினமும் மறக்காமல் குளிக்கும் பழக்கத்தை கொள்ள வேண்டும். இதனால் உடலில் இருக்கும் கிருமிகள், அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

நகங்களை வெட்டுவது

நீளமான நகங்கள் இருந்தால், எந்த ஒரு செய்யும் செயலும் ஆரோக்கியமானதாக இருக்காது. ஏனெனில் நகங்களின் இடுக்குகளில் அழுக்குகள் நுழைந்து, பின் எவ்வளவு தான் கைகளை கழுவி சாப்பிட்டாலும், கிருமிகள் போகாமல், உண்ணும் உணவின் மூலம் உடலில் சென்று நோயை உண்டாக்கும். எனவே அடிக்கடி நகங்களை வெட்டும் பழக்கத்தை கொள்ள வேண்டும்.

பொருட்களை பகிர வேண்டாம்

சிலர் நண்பர்கள், உறவினர்கள் தான் என்று நினைத்து, எதைக் கேட்டாலும் கொடுத்துவிடுவார்கள். கொடுப்பது தவறல்ல. ஆனால் ஒருசில முக்கிய உடைமைகளான ரேசர், டூத் பிரஷ், நெயில் கிளிப் போன்றவற்றை பகிரக் கூடாது. இவ்வாறு பகிர்வது கிருமிகளை பகிர்வதற்கு சமமானது.

சன் ஸ்கிரீன்

வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் லோசனை தடவிச் செல்லும் பழக்கத்தை கொள்ள வேண்டும். இதனால் சூரியக்கதிர்களின் அதிகப்படியான தாக்கத்தினால் ஏற்படும் சருமப் பிரச்சனைகளான சரும புற்றுநோய், பழுப்பு நிற சருமம் போன்றவை வராமல் தடுக்கலாம். மேலும் நீண்ட நாட்கள் இளமையோடும் இருக்க முடியும்.

இனிப்புகள்

இனிப்பு உணவுகளை சாப்பிடுவது, ஆல்கஹால் மற்றும் சிகரெட் பிடிப்பதற்கு சமம். ஏனெனில் அதிகப்படியான இனிப்பு உடலில் இருந்தால், உடல் எடை அளவுக்கு அதிகமாவதோடு, நீரிழிவு ஏற்படும் அபாயமும் ஏற்படும். எனவே இனிப்புப் பொருட்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி

உடலில் இருந்து தினமும் வியர்வையானது நிச்சயம் வெளியேற வேண்டும். அதற்கு உடற்பயிற்சி தான் சரியான வழி. எனவே குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சியை செய்து வந்தால், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் வலுவாவதோடு, மன அழுத்தம் குறைந்து, உடல் எடையும் சீராக இருக்கும்.

நல்ல தூக்கம்

தினமும் குறைந்துது 8 மணிநேர தூக்கமானது மிகவும் அவசியம். எவ்வளவு நேரம் தூங்குகிறோமோ, அதைப் பொறுத்து தான் உடல் ஆரோக்கியமும் உள்ளது. மேலும் சரியான தூக்கம் இல்லாவிட்டால், டென்சன் அதிகரித்து, மன இறுக்கம் ஏற்பட்டு, எந்த செயலையும் பொறுமையாக சரியாக செய்ய முடியாது.

கவலைப்பட கூடாது

எந்த ஒரு விஷயத்தையும் நினைத்து கவலைக் கொள்ளக் கூடாது. அவ்வாறு கவலைப் பட்டால், மன அழுத்தம், மன தளர்ச்சி, தூக்கமின்மை மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே கவலை மனதில் ஏற்பட்டால், அதனைப் போக்க தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்ய வேண்டும்.

கம்ப்யூட்டர்

தற்போது கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. மேலும் சிறு குழந்தைகளும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வாறு கம்ப்யூட்டர் முன் வேலை பார்க்கும் போது, கண்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு, கண்களுக்கு கண்ணாடி அணிந்து கொண்டு வேலை செய்ய வேண்டும். இதனால் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

தண்ணீர்

தினமும் குறைந்தது 8-10 டம்ளர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். போதுமான தண்ணீர் உடலில் இல்லாவிட்டால், உடலில் வறட்சி ஏற்பட்டு, செல்கள் சரியாக செயல்படாமல் போய்விடும்.

ஜங்க் உணவுகள்

ஜங்க் உணவுகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய உணவுகளை அதிகம் சாப்பிட்டால், அந்த உணவுகளில் உள்ள கொழுப்புக்கள், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியைப் பயன்படுத்துவதால், உடலில் மிகவும் மோசமான நோய்கள் உண்டாகும். அந்த நோய்கள் என்னவென்று சொல்ல முடியாது. அந்த அளவில் நோய்களானது உடலில் வந்துவிடும்.

புகைப்பிடித்தல்

ஒரு சிகரெட் பிடித்தாலும், அவை உடலில் இரத்த ஓட்டத்தை குறைத்து, நுரையீரல்களில் அடைப்புக்கள், இதய நோய் போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.

உடலுறவு

உடலுறவு கொள்வது என்பது ஒருவித சந்தோஷமான ஒரு அனுபவம். இத்தகைய உறவில் சிறிது முட்டாள்தனமாக செயல்பட்டாலும், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உடலுறவு கொள்ளும் போது, குழந்தை வேண்டாம் என்று நினைத்தால், கருத்தடைப் பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்வது எப்போதும் சிறந்தது.

தன்னையே மதித்தல்

உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமெனில், முதலில் ஒருவர் தன்னையே நேசிக்க வேண்டும். உடலில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், தன்னையே நேசித்து, அத்தகைய பிரச்சனைகளை தம்மால் சரிசெய்துவிட முடியும் என்று நினைத்து, தன்னையே நேசித்து, மன உறுதியுடன் செயல்பட்டாலும், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

காய்கறிகள்

உணவுகள் சாப்பிடுவதில் அனைத்து வகையான காய்கறிகளையும் விரும்பி சாப்பிடும் பழக்கத்தை கொள்ள வேண்டும். ஏனெனில் உடலுக்கு வேண்டிய சத்துக்களை உணவுகள் மூலம் பெறுவதால், உணவுகளில் காய்கறிகளை அதிகம் விரும்பி சாப்பிட வேண்டும். மேலும் காய்கறிகளில் நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இதனை தினமும் உணவில் சேர்க்க, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.