×

தொண்டையிலும் ,மண்டையிலும் இருக்கும் சளியை வீடு கட்டி அடிக்க செய்யும், இந்த வீட்டு வைத்தியம்

தினந்தினம் ஆயிரக்கணக்கில் கொரோனா தொற்று பரவிவரும் இந்நேரத்தில், உடம்பில் கொஞ்சம் டெம்பரேச்சர் உயர்ந்தால்கூட பயம் தொற்றிக்கொள்கிறது. கொரோனா வைரஸ் நமக்கு அறிமுகமாவதற்கு முன்பும் நமக்கு மற்ற நுண்ணுயிரிகளால் சளி, காய்ச்சல், இருமல், த்ரோட் இன்ஃபெக்ஷன் போன்ற உடல்நலப் பிரச்னைகள் எல்லாம் ஏற்பட்டுக்கொண்டுதான் இருந்தன.இருமல், சளி, மூச்சுத்திணறல்நம்மைச் சுற்றியுள்ள 200-க்கும் மேற்பட்ட வைரஸ்களால் இது ஏற்படுகிறது. யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். இதற்கென்று குறிப்பிட்ட சீஸன் என்றெல்லாம் எதுவுமில்லை. எந்தக் குறிப்பிட்ட நோய்க்கிருமியால் நமக்கு இந்தப் பிரச்னை ஏற்படுகிறதோ
 

தினந்தினம் ஆயிரக்கணக்கில் கொரோனா தொற்று பரவிவரும் இந்நேரத்தில், உடம்பில் கொஞ்சம் டெம்பரேச்சர் உயர்ந்தால்கூட பயம் தொற்றிக்கொள்கிறது. கொரோனா வைரஸ் நமக்கு அறிமுகமாவதற்கு முன்பும் நமக்கு மற்ற நுண்ணுயிரிகளால் சளி, காய்ச்சல், இருமல், த்ரோட் இன்ஃபெக்‌ஷன் போன்ற உடல்நலப் பிரச்னைகள் எல்லாம் ஏற்பட்டுக்கொண்டுதான் இருந்தன.இருமல், சளி, மூச்சுத்திணறல்நம்மைச் சுற்றியுள்ள 200-க்கும் மேற்பட்ட வைரஸ்களால் இது ஏற்படுகிறது. யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். இதற்கென்று குறிப்பிட்ட சீஸன் என்றெல்லாம் எதுவுமில்லை. எந்தக் குறிப்பிட்ட நோய்க்கிருமியால் நமக்கு இந்தப் பிரச்னை ஏற்படுகிறதோ அந்த நோய்க்கிருமியின் தாக்கத்தைப் பொறுத்து நோயின் வீரியமும் அதிகமாக இருக்கும். ஏற்கெனவே நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னை, மார்புச்சளி, ஆஸ்துமா போன்றவை இருக்கும் ஒருவருக்கு இந்த இன்ஃபெக்‌ஷன் ஏற்படும்பட்சத்தில் அவருக்கு அதிதீவிர மூச்சுத்திணறலும் ஏற்படலாம்.

சளி இருந்தால் மூச்சு விடவே சிரமமாக இருக்கும். சுவாசமானது இயல்பாக இல்லையென்றால் அன்றாட தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும்.

மேலும் தொண்டைச் சளி மற்றும் கபம் இருந்தால், வாய் துர்நாற்றம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால் இயல்பாக செயல்பட முடியாத நிலை ஏற்படும். இதற்காக கண்டுபிடித்த மருந்துக்களை உட்கொண்டால், அவை மேலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் என்பதால், இதற்காக எடுக்கும் மருந்துகள் இயற்கையானதாக இருந்தால் மிகவும் சிறந்தது.

இதில் அதிர்ச்சி கொடுக்கக் கூடிய செய்தி என்னவென்றால், சிகரெட் பிடிப்பதாலும் தொண்டையில் சளி உருவாக்கலாம். இப்போது இருமலுடன் கூடிய சளியை குணப்படுத்த சில டிப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆவி பிடித்தல்

தொண்டை சளி இறுகி இருந்தால், அப்போது சூடான நீரில் ஆவி பிடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தண்ணீர் 

கபம் மற்றும் சளியை தளர்த்த வேண்டுமெனில், தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

சுத்தமான மூக்கு

தொண்டையில் சளி தேங்காமல் இருக்க, மூக்கினை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்

உப்புத் தண்ணீர்

சளி இருக்கும் போது, வெதுவெதுப்பான தண்ணீருடன் உப்பைச் சேர்த்து அடிக்கடி வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்து, தொண்டை கரகரப்பு நீங்கும். இந்த தண்ணீரை முழுங்கிவிட கூடாது.

யூகலிப்டஸ் எண்ணெய்

கபத்தைத் தளர்த்தவும் மற்றும் சளியின் இறுக்கத்தை போக்கவும், சிறிது யூகலிப்டஸ் எண்ணெயை வெந்நீரில் சேர்த்து ஆவி பிடித்தல் நல்லது.

உணவுகளில் கவனம் தேவை

சளியை அதிகரிக்கும் பால் பொருட்கள், இறைச்சி அல்லது வறுத்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்கவும்.

மூலிகைத் தேநீர்

சளியை குணப்படுத்த மூலிகைத் தேநீர் அல்லது கோழி சூப் போன்றவற்றை சூடாக பருகினால், தொண்டை இதமாக இருக்கும்.

மஞ்சள் தூள்

சளி இருக்கும் பொழுது, அரை டம்ளர் பாலுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பருக வேண்டும். ஏனேனில் மஞ்சள் தூளில் கிருமி நாசினிகளின் பண்பு அதிகமாக இருப்பதால், அதனைக் குடிக்கும் போது, தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.

எலுமிச்சை மற்றும் தேன்

எலுமிச்சை மற்றும் தேனை பயன்படுத்த வேண்டும். சூடான நீரில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகவும். இதனால் தேன் தொண்டைப் புண்ணை ஆற்றவும், எலுமிச்சை சளியை குறைக்கவும் உதவுகின்றது.

சிகரெட்

வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் க்ளீனர்கள், பெயிண்ட், இரசாயன பொருட்கள் அல்லது சிகரெட் புகை போன்றவற்றிலிருந்து விலகியே இருக்க வேண்டும்.

புகைப்பிடித்தல்

தொண்டை எரிச்சல் மற்றும் சுவாச கோளாறுகளை ஏற்படுத்தும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், உடனே அதனை நிறுத்தி விட வேண்டும். புகை பிடிப்பதால் தொண்டை சளி மேலும் இறுகிவிடும்.

காரமான உணவுகள்

காரமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஹார்ஸ் முள்ளங்கி அல்லது ஹாட் சில்லி பெப்பர்ஸ் போன்ற உணவுகளை உட்கொள்வது சளி இறுகுவதை தவிர்க்கும்.

இந்நேரத்தில் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியைப் பெருக்கிக் கொள்ள ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். . தினமும் காலையில் உப்பு போட்டு வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. வெந்நீரில் மஞ்சள் தூள் கலந்து ஆவிபிடிக்கலாம்.