×

“டாடி”யாக முடியாம வாடி போறவங்களுக்கு ஓடி வந்து உதவும் இந்த பழம்

இன்றைய காலத்தில் தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால் பல ஆண்களுக்கு அவர்களின் விந்தணுக்கள் குறைத்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்றன வாய்ப்புகள் அதிகமாகின்றன. பப்பாளி பழம் ஆண்களின் உடலில் உயிரணுக்களை பெருக்கும் திறன் கொண்டதாகும். இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும். ஒரு மனிதனின் வயிறு ஆரோக்கியமாக இருந்தாலே பல நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். தினமும் காலையில் சிறிது ஒரு பப்பாளி பழ துண்டுகளை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள்
 

இன்றைய காலத்தில் தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால் பல ஆண்களுக்கு அவர்களின் விந்தணுக்கள் குறைத்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்றன வாய்ப்புகள் அதிகமாகின்றன. பப்பாளி பழம் ஆண்களின் உடலில் உயிரணுக்களை பெருக்கும் திறன் கொண்டதாகும். இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.

ஒரு மனிதனின் வயிறு ஆரோக்கியமாக இருந்தாலே பல நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். தினமும் காலையில் சிறிது ஒரு பப்பாளி பழ துண்டுகளை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.

மேலும் இது தாய்ப் பால் சுரப்பை அதிகமாக்கும், மாதவிலக்கைத் தூண்டும்; பசியை உண்டாக்கும். மேலும் பப்பாளி பழம், கழிச்சல் உண்டாக்கும்; சிறுநீரைப் பெருக்கும்; உடலை பலமாக்கும்

 பப்பாளி பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த பொட்டாசியம் உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்படாமல் தடுக்கிறது. இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர பப்பாளிப்பழத்தில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது.

பப்பாளி இலை, பால், காய், பழம் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை.கட்டிகள் உடைய பப்பாளிப் பாலைப் பாதிக்கப்பட்ட இடத்தின் மீது பூச வேண்டும் அல்லது பப்பாளி இலையை நசுக்கி வேக வைத்து கட்டியின் மீது வைத்துக் கட்ட வேண்டும்.

பப்பாளியில் புரத சத்துப் பொருள் அடங்கியுள்ளது. மாமிசம் சமைப்பவர்கள் பப்பாளிக் காய் சிறிதளவு மாமிசத்துடன் கலந்து வேக வைக்க உடனடியாக கறி வேகும்.பப்பாளிக் காயைச் சாம்பார் அல்லது கூட்டு முறையில் சமையல் செய்து சாப்பிட்டு வர உடல் இளைக்கும்.