×

தொப்பைக்கு குட் பை சொல்லி சப்பையான வயிறு வேணுமா?இந்த ஜீஸ் குடிங்க

நம்முடைய வாழ்க்கை முறை மாறிப்போனதாலும் ,உடலுழைப்பு இல்லாததாலும் பலருக்கு தொப்பை தவிர்க்க முடியாத சொத்தாகி விட்டது .அதை குறைக்க பலர் படாத பாடு படுகின்றனர் .இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள். ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை
 

நம்முடைய வாழ்க்கை முறை மாறிப்போனதாலும் ,உடலுழைப்பு இல்லாததாலும் பலருக்கு தொப்பை தவிர்க்க முடியாத சொத்தாகி விட்டது .அதை குறைக்க பலர் படாத பாடு படுகின்றனர்

.இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்.

ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை தயாரித்து  மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால், தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம்.

சரி, இப்போது மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ் என்னவென்றும், அந்த ஜூஸில் சேர்க்கப்படும் பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றியும் பார்ப்போமா!

1 வெள்ளரிக்காய்

5 எலுமிச்சை

1 எலுமிச்சங்காய்

15 புதினா இலைகள்

2 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி

2.5 லிட்டர் தண்ணீர்

வெள்ளரிக்காய், 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.

இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம்.

வேண்டுமெனில் இந்த செயலை ஒரு வாரம் கழித்து மீண்டும் 3 நாட்கள் தொடரலாம்.

மேற்கூறிய ஜூஸை தயாரித்து ,தொடர்ந்து குடித்து தொப்பையான வயிறை சப்பையாக மாற்றி ஸ்லிம்மாக இருக்க வாழ்த்துகிறோம் .