×

பால் காரரை நிறுத்துங்க- அல்சரை துரத்துங்க

அல்சர் உள்ளவர்கள் பால் மற்றும் பால் உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிலர் பாலை குடித்தால் அல்சர் குணமாகும் என நினைக்கிறார்கள். ஆனால், பாலில் இருக்கும் புரத சத்தும் கொழுப்பு சத்தும் வயிற்று புண்ணுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். பால், வயிற்றின் அமில தன்மையை அதிகரிக்க செய்யும். அல்சர் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். காலை உணவை சாப்பிட்ட பின் சிறிது நேரம் கழித்து குடிக்கலாம். கார உணவுகளை தவிருங்கள். எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் பயிறு
 

அல்சர் உள்ளவர்கள் பால் மற்றும் பால் உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிலர் பாலை குடித்தால் அல்சர் குணமாகும் என நினைக்கிறார்கள். ஆனால், பாலில் இருக்கும் புரத சத்தும் கொழுப்பு சத்தும் வயிற்று புண்ணுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். பால், வயிற்றின் அமில தன்மையை அதிகரிக்க செய்யும்.


அல்சர் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். காலை உணவை சாப்பிட்ட பின் சிறிது நேரம் கழித்து குடிக்கலாம். கார உணவுகளை தவிருங்கள். எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் பயிறு வகைகளை அடிக்கடி சாப்பிட வேண்டாம்.

சிட்ரஸ் பழங்கள் : அல்சர் இருப்பவர்கள் எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை இன்னும் அதிகமான அமிலசுரப்பை தூண்டுவதால் வயிற்று எரிச்சலை உண்டாக்கும்.

சிவப்பு இறைச்சி:
இந்த சிவப்பு இறைச்சி, வயிற்று ஓரங்களை பழுதடைய செய்யும். இதில் உள்ள அதிக அளவிலான புரத சத்தும் கொழுப்பு சத்தும் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால், வயிற்றிலேயே அதிக நேரம் இறைச்சி உணவு தங்கிவிடும். இதனாலும் வயிற்றில் அமிலம் அதிகம் சுரக்க நேரிடும். இதுவும் அல்சரை அதிகரிக்க செய்யும்.