×

முதுகு வலியை மூணே நிமிஷத்தில் விரட்டும் முன்னோர்கள் வைத்தியம் .

இன்று இந்த கொரானா காலத்தில் பலர் வீட்டிலிருந்தே வேலை பார்க்கிறார்கள் .அதனால் முறையாக அமராமல் கம்ப்யூட்டர் முன்னாடி வேலை பார்ப்பதால் முதுகு வலியால் அவதிப்படுகின்றனர் .இதை மூணே நிமிஷத்தில் விரட்டும் சில வழிகளை பார்க்கலாம் பொதுவாக முதுகு வலிக்கு வைட்டமின் டி குறைவு முக்கியமான காரணமாக இருக்கலாம். ஆகவே, இரத்தத்தில் போதுமான அளவு வைட்டமின் டி இருக்கிறதா என்று சோதித்து பார்க்கவேண்டும். முட்டை, பால், மீன், காளான் ஆகியவற்றை சாப்பிட்டால் வைட்டமின் டி சத்து உடலில் சேரும்.
 

இன்று இந்த கொரானா காலத்தில் பலர் வீட்டிலிருந்தே வேலை பார்க்கிறார்கள் .அதனால் முறையாக அமராமல் கம்ப்யூட்டர் முன்னாடி வேலை பார்ப்பதால் முதுகு வலியால் அவதிப்படுகின்றனர் .இதை மூணே நிமிஷத்தில் விரட்டும் சில வழிகளை பார்க்கலாம்

பொதுவாக முதுகு வலிக்கு வைட்டமின் டி குறைவு முக்கியமான காரணமாக இருக்கலாம். ஆகவே, இரத்தத்தில் போதுமான அளவு வைட்டமின் டி இருக்கிறதா என்று சோதித்து பார்க்கவேண்டும். முட்டை, பால், மீன், காளான் ஆகியவற்றை சாப்பிட்டால் வைட்டமின் டி சத்து உடலில் சேரும்.  தினமும் 2 தேக்கரண்டி அளவு கறுப்பு எள்ளை உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெள்ளை எள், தோல் நீக்கப்பட்டதாக இருக்கும். ஆகவே, கறுப்பு எள்ளை சாப்பிட வேண்டும். கறுப்பு எள், நாம் சாப்பிடும் உணவிலிருந்து கால்சியம் (சுண்ணாம்புச் சத்து) உடலில் சேருவதற்கு உதவும்.

 மெக்னீசியம் சத்து குறைவினாலும் முதுகு வலி உண்டாகலாம். பீன்ஸ், கீரை வகைகள் குறிப்பாக பசலை கீரை, முந்திரி, பாதாம், பருப்பு வகைகள், அத்திப்பழம், பூசணி விதை, சுரைக்காய் ஆகியவற்றில் மெக்னீசியம் தாது உள்ளது. அவற்றை அதிகமாக சாப்பிட்டால் மெக்னீசியம் குறைபாட்டினால் ஏற்படும் முதுகு வலி குணமாகும்.

முன்னோர்கள் சொன்ன  வைத்தியம்

1.விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி வலியுள்ள  இடத்தில்  தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.

2.பூண்டு 5 பல்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணையில் காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில்,  வலியுள்ள இடங்களில் தடவலாம்.

3.புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.

4.சூடான நல்லெண்ணை + உப்பு – மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவும்.

5.விளக்கெண்ணை ஒரு தேக்கரண்டி, தேங்காய் எண்ணை 1 தேக்கரண்டி + உலர்ந்த இஞ்சிப் பொடி 1/4 தேக்கரண்டி – இவற்றை 1/2 கப் சூடான நீரில் கலந்து தினமும் இரவில் சாப்பிடவும்.

6.வெண்நொச்சி’ மூலிகை, இடுப்புப் பிடிப்பை குணப்படுத்தும். இதன் இலைகளால் செய்யப்படும் கஷாயத்தை, தினம் 3 லிருந்து 4 தேக்கரண்டி வீதம், எடுத்துக் கொள்ளவும்.