×

அரசு கணக்கு 104-அடக்கத்துக்கு வந்தது 2557-கொரானா இறப்பை 25 மடங்கு குறைத்து காமிக்கும் கொடுமை

மத்தியபிரதேச மாநிலத்தில் கொரானாவால் இறந்தவர்கள் 104 பேர் என்று அரசு கூறுகையில் ,மயான பதிவேட்டில் 2557 பேர் என்று இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இரண்டு மயாணங்கள் உள்ளன .அங்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3811 பேரின் இறந்த உடல்கள் எரியூட்டப்பட்டன .இதில் கொரானாவால் இறந்தவர்கள் 2557பேர் என்று அங்குள்ள பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது .ஆனால் அந்த மாநில அரசு வெறும் 104 பேர்தான் கடந்த மாதம் கொரானாவால் இறந்தார்கள் என்று கூறியுள்ளது பெரும்
 

மத்தியபிரதேச மாநிலத்தில் கொரானாவால் இறந்தவர்கள் 104 பேர் என்று அரசு கூறுகையில் ,மயான பதிவேட்டில் 2557 பேர் என்று இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இரண்டு மயாணங்கள் உள்ளன .அங்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3811 பேரின் இறந்த  உடல்கள் எரியூட்டப்பட்டன .இதில் கொரானாவால் இறந்தவர்கள் 2557பேர் என்று அங்குள்ள பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது .ஆனால் அந்த மாநில அரசு வெறும் 104 பேர்தான் கடந்த மாதம் கொரானாவால் இறந்தார்கள் என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இது பற்றி அங்குள்ள  எதிர்க்கட்சிகள் ஆளும் அரசை கடுமையாக விமர்சித்துள்ளன .

மேலும் இதுவரை அந்த மாநிலத்தில் கடந்த ஆண்டு முதல் வெறும் 742பேர்தான் இப்படி கொரானா தாக்கி இறந்தார்கள் என்று அரசு கூறியிருப்பது பெரும் குழப்பத்தை  ஏற்படுத்தியுள்ளது .இது பற்றி  போபாலில் இருக்கும் எரியூட்டும் மயானத்தின் நிர்வாகி கூறுகையில், தாங்கள் மத்திய அரசின் கொரானா இறப்பு வழிகாட்டுதலின் படி கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2557 உடல்களை எரித்துள்ளதாக இந்த பதிவேட்டில் இருப்பதை சுட்டிக்காட்டி கூறினர் .

ஆனால் அரசாங்கம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக அங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் ஆளும் அரசை குற்றம் சுமத்துகிறார்கள் .மேலும் இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடவேண்டுமென்று அந்த கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.