×

ஒற்றைத் தலைவலி பிரச்னையைக் குறைக்கும் எளிய வழிகள்!

தலைவலியையே தாங்க முடியாது, சில நாட்கள் வரை நீடிக்கும் ஒற்றைத் தலைவலி வந்தால் சொல்லவே வேண்டாம் அதை அனுபவிப்பவர்களின் கொடுமையை. ஏழு பேரில் ஒருவர் ஒற்றைத் தலைவலி பிரச்னையால் அவதியுறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்படி என்றால் கோடிக்கணக்கான மக்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுத்தான் வருகின்றனர். ஆனால் அதற்கு என்ன சிகிச்சை என்று தெரியாமல் முடங்கிக் கிடக்கின்றனர். ஒற்றைத் தலைவலி என்று மூளை நரம்பியல் பிரச்னையால் வரக்கூடியது என்று மருத்துவம் சொல்கிறது. இப்படி ஏற்படக்கூடிய வலியானது சில மணி
 

தலைவலியையே தாங்க முடியாது, சில நாட்கள் வரை நீடிக்கும் ஒற்றைத் தலைவலி வந்தால் சொல்லவே வேண்டாம் அதை அனுபவிப்பவர்களின் கொடுமையை. ஏழு பேரில் ஒருவர் ஒற்றைத் தலைவலி பிரச்னையால் அவதியுறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்படி என்றால் கோடிக்கணக்கான மக்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுத்தான் வருகின்றனர். ஆனால் அதற்கு என்ன சிகிச்சை என்று தெரியாமல் முடங்கிக் கிடக்கின்றனர்.

ஒற்றைத் தலைவலி என்று மூளை நரம்பியல் பிரச்னையால் வரக்கூடியது என்று மருத்துவம் சொல்கிறது. இப்படி ஏற்படக்கூடிய வலியானது சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை நீடிக்கும். இந்த பிரச்னை எல்லா வயதினருக்கும் ஏற்படும் என்பதுதான் கொடுமை!

குடும்பத்தில் அப்பா, அம்மாவுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்னை இருந்தால் பிள்ளைகளுக்கும் வரலாம். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத்தான் ஒற்றைத் தலைவலி வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாம். சாக்லெட், காஃபின், ஆல்கஹால் என நாம் எடுத்துக்கொள்ளும் சில உணவுகள் கூட ஒற்றைத் தலைவலியைத் தூண்டலாம். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் குறிப்பாக மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்திவிடும்.

ஒற்றைத் தலைவலி பிரச்னை உள்ளவர்கள் தங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். கடைசியாக எப்போது எல்லாம் ஒற்றைத் தலைவலி வந்தது என்பதை எண்ணிப் பார்த்து அன்றைய தினம் எடுத்த உணவை மீண்டும் சாப்பிடுவதால் ஒற்றைத் தலைவலி வருகிறதா என்று கவனிக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவு, காபி, ஆல்கஹால், சாக்லெட், கார்பனேட்டட் பானங்கள் போன்றவை ஒற்றைத் தலைவலியைத் தூண்டும். இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

லாவண்டர், ரோஸ்மேரி மூலிகை வாசனை ஒற்றைத் தலைவலியைப் போக்கும். இந்த எண்ணெய்கள் வாசனைத் திரவிய கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வைத்துக்கொள்ளலாம். லாவண்டர் எண்ணெய் வாசனையானது மனதை அமைதிப்படுத்தும். மன அழுத்தம் போக்கும். லாவண்டர் அல்லது ரோஸ்மேரி எண்ணெய்யை ஒரு துளி விட்டு நீராவி பிடிப்பது நல்ல தீர்வைத் தரலாம்.

ஒற்றைத் தலைவலி ஏற்படும்போது ஐஸ்பேக் ஒத்தடம் கொடுக்கலாம். அது வலியைக் குறைக்க உதவும். ஒற்றைத் தலைவலி என்பது மூளையில் உள்ள ரத்த நாளாங்களில் ஏற்படும் வீக்கத்தால் வரலாம். ஐஸ் ஒத்தடம் ரத்த நாளங்களை சுருங்கச் செய்யும். நெற்றி, கழுத்து போன்ற இடங்களில் ஐஸ் ஒத்தடம் செய்வது நிவாரணத்தைத் தரும்.

ஒற்றைத் தலைவலி வரும் போது இஞ்சி டீ அருந்தலாம். அதுவும் தலைவலி மற்றும் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும். ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகளான வாந்தி, குமட்டல் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும்!