×

கொரோனாவுக்குப் பிறகு உணவு முறை இப்படித்தான் இருக்க வேண்டுமாம்!

ஊட்டச்சத்துக்கள் தான் நம்முடைய உடலின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையான விஷயமாக உள்ளது. நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதற்கு ஏற்ப விளைவுகளை நாம் பெறுகிறோம். நாம் உட்கொள்ளும் உணவு அடிப்படையிலேயே நம்முடைய உடல் உடலைக் கட்டமைப்பது, பழுது நீக்குவது, பராமரிப்பது போன்றவற்றை மேற்கொள்கிறது. நல்ல உணவைக் கொடுத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். கெடுதலான உணவுகளைக் கொடுத்தால் உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய் என அதற்கான பலனையும் நாம் தான் அனுபவித்தாக வேண்டும். கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை
 

ஊட்டச்சத்துக்கள் தான் நம்முடைய உடலின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையான விஷயமாக உள்ளது. நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதற்கு ஏற்ப விளைவுகளை நாம் பெறுகிறோம். நாம் உட்கொள்ளும் உணவு அடிப்படையிலேயே நம்முடைய உடல் உடலைக் கட்டமைப்பது, பழுது நீக்குவது, பராமரிப்பது போன்றவற்றை மேற்கொள்கிறது.

நல்ல உணவைக் கொடுத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். கெடுதலான உணவுகளைக் கொடுத்தால் உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய் என அதற்கான பலனையும் நாம் தான் அனுபவித்தாக வேண்டும்.

கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்ற அனைவருமே சந்தித்தது உடல் எடை இழப்பைத்தான். கொரோனா சிகிச்சை பெற்ற நாட்களில் சராசரியாக 6-7 கிலோ உடல் எடையை நோயாளிகள் இழந்துள்ளனர். இதை ஈடுகட்ட உடலுக்கு அதிக எனர்ஜி மற்றும் புரதச்சத்து தேவை. இதனுடன் ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்களும் நிறைய தேவைப்படுகிறது.

கோவிட் வந்தவர்களுக்கு உடல் கட்டமைப்பு சரியாக புரதச்சத்து தேவை. பருப்பு, பயிறு, பால் போன்றவற்றில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இதனுடன் கோழியின் நெஞ்சுப் பகுதி இறைச்சி, மீன், முட்டையின் வெள்ளைப் பகுதியை எடுத்துக்கொள்வதன் மூலம் புரதச்சத்தைப் பெறலாம்.

காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும்  என்ன மாதிரியான காய்கறி, பழங்களை எடுக்கிறோம், எவ்வளவு எடுக்கிறோம் என்பதிலும் கவனம் தேவை.

வழக்கமாக எடுத்துக்கொள்ளும் எந்த ஒரு உணவையும் தவிர்க்க வேண்டாம். உடல் எடை கூடுகிறது, சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்று சிலர் அரிசி உள்ளிட்ட உணவைத் தவிர்ப்பார்கள். இது தேவையற்றது. உடலுக்கு கார்போஹைட்ரேட் மிகவும் அவசியமானது. மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணர் இது வேண்டாம் என்று பரிந்துரைத்தால் மட்டும் பின்பற்றினால் போதுமானது.

வெந்நீர் அருந்த மறக்க வேண்டாம். வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது நுரையீரல் ஆரோக்கியத்துக்கு நல்லது. பொதுவாக தொற்று நோய் ஏற்பட்டால் அதிக அளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். தண்ணீரை உடல் வெளியேற்றும்போது அதன் வழியாக கிருமிகளும் வெளியேற்றப்படும். மேலும் கிருமிகளை நம்முடைய வெள்ளை அணுக்கள் அழிக்கும்போது அவை உடனடியாக வெளியேற்றப்படுவது அவசியம். அதற்கு தண்ணீர் அருந்துவது இன்றியமையாததாக இருக்கிறது.

எந்த ஒரு உணவும், மூலிகையும், மருந்தும் கொரோனாவை அழிக்கும் என்று கூறிவிட முடியாது. ஆனால் கொரோனா தொற்றை அழிக்க, தவிர்க்க, கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய அவை உதவி செய்கின்றன. கிருமியை அகற்ற உடல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டும். ஆரோக்கியமாக செயல்பட ஊட்டச்சத்து மிக்க உணவு அவசியம். எனவே, போதுமான அளவு ஆரோக்கியமான உணவை எடுப்பதை தவிர்க்க வேண்டாம்!