×

வெயிட் லாஸ் மிஸ்டேக்ஸ்: எல்லோருக்கும் ஒரே விதமான டயட் சரியாக இருக்குமா?

உடல் எடையைக் குறைக்க, உடலை ஃபிட்டாக பராமரிக்க விதவிதமான டயட் முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஜி.எம் டயட், பேலியோ, வீகன், குறைந்த கார்போஹைட்ரேட் டயட், டங்கன் டயட், குறைந்த கொழுப்புச்சத்து டயட், எச்.சி.ஜி டயட் என்று ஏராளமான டயட் முறைகள் உள்ளன. இவற்றில் எது சரியானது என்ற குழப்பம் எல்லோருக்கும் உள்ளது. ஒரு டயட் முறையை பின்பற்றும் நபர் தான் பின்பற்றும் முறைதான் சிறந்தது என்று கூற, மற்றவர்கள் குழம்பிப் போய்விடுகின்றனர். நாம் உடுத்தும் உடை, செல்ல வேண்டிய
 

உடல் எடையைக் குறைக்க, உடலை ஃபிட்டாக பராமரிக்க விதவிதமான டயட் முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஜி.எம் டயட், பேலியோ, வீகன், குறைந்த கார்போஹைட்ரேட் டயட், டங்கன் டயட், குறைந்த கொழுப்புச்சத்து டயட், எச்.சி.ஜி டயட் என்று ஏராளமான டயட் முறைகள் உள்ளன. இவற்றில் எது சரியானது என்ற குழப்பம் எல்லோருக்கும் உள்ளது. ஒரு டயட் முறையை பின்பற்றும் நபர் தான் பின்பற்றும் முறைதான் சிறந்தது என்று கூற, மற்றவர்கள் குழம்பிப் போய்விடுகின்றனர்.

நாம் உடுத்தும் உடை, செல்ல வேண்டிய இடம், உண்ணும் உணவு என ஒவ்வொன்றுமே அவரவர் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டதாக இருக்கும்போது டயட் மட்டும் அனைவருக்கும் என்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது எப்படி சரியாக இருக்கும் என்று டயட்டீஷியன்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஒருவருடைய வயது, அவரது உடல் நிலை, மெட்டபாலிசம் ரேட் என்பதைப் பொறுத்தே அவருக்கான டயட் பரிந்துரைக்கப்படுகிறதே தவிர, அனைவருக்கும் ஒரே மாதிரியான டயட் பரிந்துரைக்கப்படுவது இல்லை என்கின்றனர்.

நம்முடைய செரிமான மண்டலம் மிகவும் சிக்கலானது. ஒவ்வொருவருக்கும் செரிமான மண்டலத்தில் வாழும் நல்ல பாக்டீரியா காலணியின் செயல்பாடு, வயிற்றில் சுரக்கும் என்சைம்கள் எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்து செரிமானத் திறன் மாறுபடும். அதனால்தான் ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமான டயட் பின்பற்றுவது அவசியம் என்று பரிந்துரைக்கிறோம் என்கின்றர் டயட்டீஷியன்கள். எனவே, உடல் எடையைக் குறைக்க, எடையைப் பராமரிக்க அவரவர் உடல் நலன், தேவையைப் பொருத்து டயட்டை தொடங்குவது நல்லது.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் எடுத்த எடுப்பில் ஒரே மாதத்தில் 10 -15 கிலோ குறைந்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்த அதிகப்படியான உடல் எடை ஒரே நாளில், ஒரே மாதத்தில், ஒரு ஆண்டில் வந்துவிடவில்லை. ஆனால் குறைக்க நினைக்கும் போது உடனடியாக நடந்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். உடல் எடை குறைப்பு கொஞ்சம் கொஞ்சமாக முழு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

சிலர் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுகிறோம் என்று வெளியே செல்லும்போது கண்டதையும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கின்றனர். அது ஆப்பிளாக இருந்தாலும் சரி, பீட்ஸாவாக இருந்தாலும் சரி இப்படி ஓய்வின்றி செரிமான மண்டலத்துக்கு வேலை கொடுப்பது நல்லது இல்லை. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவு இடைவெளியை சற்று பராமரிப்பது நல்லது.

உடல் எடையைக் குறைக்க நினைத்து உணவுக் கட்டுப்பாட்டைத் தொடங்கியதுமே அதிகப்படியான உடற்பயிற்சியில் ஈடுபட்டு கலைத்துவிடுகின்றனர். அப்படிச் செய்யத் தேவையில்லை. டயட் பிளான் வொர்க்அவுட் ஆன பிறகு ஒரு சில வாரங்கள் கழித்து உடற்பயிற்சியை தொடங்கலாம்.

உடல் எடை குறைப்புக்கும் தூக்கத்துக்கும் தொடர்பு உள்ளது. சிலர் இரவு 1, 2 மணி வரை முழித்திருந்துவிட்டு, காலை 10 மணி வரை தூங்குவார்கள். இதைத் தவிர்த்து இரவு 9 , 10 மணிக்கு எல்லாம் தூங்கச் சென்றுவிட வேண்டும். எட்டு மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் நலம் தரும்.

எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்க வேண்டாம். அதிக கொழுப்பு மிக்க உணவைக் காலையில் எடுத்துக்கொள்ள வேண்டாம். எளிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் வெந்நீர் அருந்திவந்தால் உடல் எடை ஆரோக்கியமான முறையில் குறையும்.