×

எருமைப்பாலில் இம்புட்டு விஷயம் இருக்குதா?

யாரும் எருமைப்பால் உடலுக்கு தீங்கானது என்று சொல்லவில்லை.. ஆனால் பால் என்றாலே நம்மவர்களுக்கு பசும்பால்தான்..உண்மையில் பசும்பாலைப் போலவே எருமைப்பாலும் உடலுக்கு மிகச் சிறந்த நண்மைகளை வழங்குகிறது.இதனைப் பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எருமைப் பாலில் புரதம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ கார்போஹைட்ரேட் ஆகியசத்துகள் நிறைந்துள்ளது. இது எலும்புகளை வலுப்பெறச் செய்யும் இதயத்தைப் பாதுகாக்கும்,ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எருமைப்பால் சருமத்திற்கு நல்லது. சருமத்தை நன்கு பொலிவு பெறச்செய்யும்.பசும்பால் போலவே, எருமைப் பாலிலும் புரதச்சத்து அதிகம் உள்ளது. ஆராய்ச்சியின்
 


யாரும் எருமைப்பால் உடலுக்கு தீங்கானது என்று சொல்லவில்லை.. ஆனால் பால் என்றாலே நம்மவர்களுக்கு பசும்பால்தான்..உண்மையில் பசும்பாலைப் போலவே எருமைப்பாலும் உடலுக்கு மிகச் சிறந்த நண்மைகளை வழங்குகிறது.இதனைப் பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன.


எருமைப் பாலில் புரதம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ கார்போஹைட்ரேட் ஆகியசத்துகள் நிறைந்துள்ளது. இது எலும்புகளை வலுப்பெறச் செய்யும் இதயத்தைப் பாதுகாக்கும்,ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எருமைப்பால் சருமத்திற்கு நல்லது. சருமத்தை நன்கு பொலிவு பெறச்செய்யும்.
பசும்பால் போலவே, எருமைப் பாலிலும் புரதச்சத்து அதிகம் உள்ளது.

ஆராய்ச்சியின் படி, பசும் பாலை விட 10 சதவீதம் அதிக புரதச் சத்து எருமைப்பாலில் உள்ளது. பிற பால்களுடன் ஒப்பிடும் போது எருமைப்பாலில் கொழுப்பு மிகக் குறைவு.இதய ஆரோக்கியத்திற்கு எருமை பால் மிகவும் நல்லது. எருமை பாலில் கால்சியம் இருப்பதால் எலும்புகளை வலுப்படும் உண்மையில் பசும் பாலை விட எருமை பாலில் கால்சியம் அதிகம் இருக்கிறது.


எருமைப் பாலில் வைட்டமின் ஏ , வைட்டமின் சி உள்ளது இவை நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.மனிதனுடைய உடல் வளர்ச்சிக்கு தசைகளின் செயல்பாடுகள் மிக அவசியமாகும். அந்த வகையில் எருமைப்பால் தசைகளை நன்கு வளரச்செய்கிறது. எனவே இதனை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்கள் உடலளவில் நல்ல வளர்ச்சி காண்பார்கள்.