×

முதுமையைத் தள்ளிப்போடனுமா… இதை டிரை பண்ணிப் பாருங்கள்!

என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் விருப்பம். ஆனால், அது சாத்தியம் இல்லை. முதுமை… நாம் விரும்பாவிட்டாலும் நமக்கான பயணம் அது. முதுமை கொடுமை இல்லை. இளம் வயதில் நாம் செய்யும் காரியங்கள்தான் முதுமையை இனிமையானதாகவோ, கொடுமையானதாகவே மாற்றுகிறது. வயது அதிகரித்தாலும் இளமையைத் தக்க வைக்க, முதுமையைத் தள்ளிப்போட செய்ய வேண்டியவை பற்றிப் பார்ப்போம். தினசரி உணவில் சமைத்த உணவுக்கு இணையாகப் பச்சைக் காய்கறி, பழங்கள் எடுத்துக்கொள்வது இளமையைத் தக்க வைக்க உதவும். குறிப்பாக வைட்டமின்
 

என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் விருப்பம். ஆனால், அது சாத்தியம் இல்லை. முதுமை… நாம் விரும்பாவிட்டாலும் நமக்கான பயணம் அது. முதுமை கொடுமை இல்லை. இளம் வயதில் நாம் செய்யும் காரியங்கள்தான் முதுமையை இனிமையானதாகவோ, கொடுமையானதாகவே மாற்றுகிறது. வயது அதிகரித்தாலும் இளமையைத் தக்க வைக்க, முதுமையைத் தள்ளிப்போட செய்ய வேண்டியவை பற்றிப் பார்ப்போம்.

தினசரி உணவில் சமைத்த உணவுக்கு இணையாகப் பச்சைக் காய்கறி, பழங்கள் எடுத்துக்கொள்வது இளமையைத் தக்க வைக்க உதவும். குறிப்பாக வைட்டமின் ஏ, சி, இ, துத்தநாகம், செலீனியம் உள்ள உணவுகள் எடுத்துக்கொள்வது முதுமையைத் தள்ளிப்போட உதவும்.

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடலாம். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. தேனில் ஊறவைத்த நெல்லிக்காய், இஞ்சியை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். முதுமை தாமதம் ஆகும்.

காலையில் வெறும் வயிற்றில் வெண்பூசணி சாறு அருந்தலாம். இது உடல் எடையைக் குறைத்து, உடல் வெப்பத்தைத் தனித்து, ஃபிட்டாக வைக்க உதவும்.

தினமும் இரவு திரிபலா சூரணம் எடுத்துக்கொள்ளலாம். அல்லது இரவில் திரிபலா சூரணம் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு கலக்கி ஊற வைக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் உடல் உறுதியாகும். பித்தநரை உள்ளிட்ட எல்லா பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும். முதுமையைத் தள்ளிப்போடும்.

காலை உணவைத் தவிர்க்க வேண்டாம். அது உடல் பருமன் முதல் வாழ்வியல் மாற்றத்தால் ஏற்படக்கூடிய பல நோய்களுக்கு காரணம் ஆகிவிடும். இரண்டு உணவு வேளைக்கு இடையே ஊறவைத்த பாதாம், பிஸ்தா, பேரீச்சை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

அந்தக் காலத்தில் சாப்பிட்டு முடித்ததும் வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. இது செரிமானத்துக்குத் துணை புரிந்ததுடன், உடலை ஆரோக்கியமாக வைக்க உதவியது. அதனுடன் புகையிலை சேர்த்து வெற்றிலை பாக்கு போடும் பழக்கமே கெடுதலாக மாற்றிவிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் வெறும் வெற்றிலை இரண்டு சாப்பிட்டு வரலாம். இது இளமையைத் தக்க வைக்க உதவும், சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்பு வருவதற்கான வாய்ப்பை தாமதப்படுத்தும்.

குளித்ததும் டவலைக் கொண்டு முகம், உடலைத் துடைப்பதை நிறுத்துங்கள். வயது அதிகரிக்க அதிகரிக்க கொலாஜன் இழந்து சருமம் தொங்க ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் டவலைக் கொண்டு அழுத்தித் தேய்க்கும் போது சருமம் பாதிக்கப்படும். குளித்து, முகம் அலம்பிய பிறகு முகத்தை துணியைக் கொண்டு ஒற்றி எடுப்பதே சரியான வழி.

ஒரு நாளைக்கு இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். காலையில் எழுந்த உடன் ஒரே மடக்காகத் தண்ணீர் குடிப்பது தேவையில்லாதது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் என்ற அளவில் 7-8 டம்ளர் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும், சருமத்தை, உடலைப் புத்துணர்வுடன் வைக்கும்.