×

விரைப்புத் தன்மை, குழந்தையின்மை பிரச்னைக்கும் தீர்வாகும் நாவல் பொடி!

நாவல் பழ கொட்டை என்றாலே எல்லோருக்கும் அது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும் மருந்து என்ற எண்ணம் மட்டுமே வருகிறது. நாவல் கொட்டை ஏதோ சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமே உரிமையானது என்பது போல கருதுகின்றனர். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுத்துடன் வேறு பல மருத்துவ குணங்கள் கொண்டது நாவல் கொட்டை. அவை பற்றி தெரிந்துகொள்வோம். நாவல் கொட்டை பொடியானது அதிக கால்சியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி நிறைந்தது. இதனால் இது ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்குத் துணை
 

நாவல் பழ கொட்டை என்றாலே எல்லோருக்கும் அது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும் மருந்து என்ற எண்ணம் மட்டுமே வருகிறது. நாவல் கொட்டை ஏதோ சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமே உரிமையானது என்பது போல கருதுகின்றனர். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுத்துடன் வேறு பல மருத்துவ குணங்கள் கொண்டது நாவல் கொட்டை. அவை பற்றி தெரிந்துகொள்வோம்.

நாவல் கொட்டை பொடியானது அதிக கால்சியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி நிறைந்தது. இதனால் இது ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்குத் துணை புரிகிறது. இதில் உள்ள இரும்புச் சத்து ரத்தம் சுத்திகரிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

நாவல் பொடியை தினமும் இரு வேளை முறையே ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். நாவல் பொடி கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.

உடல் பருமனைக் கட்டுப்படுத்த உதவும். மேலும், ஆண்களுக்கு ஏற்படக் கூடிய விரைப்புத் தன்மை குறைபாடு, செக்ஸில் ஆர்வம் குறைவு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கிறது.

பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்னை காரணமாக குழந்தையின்மை ஏற்படலாம். அவர்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்வதுடன், தினமும் இரு வேளை தலா ஒரு டீஸ்பூன் நாவல் கொட்டை பொடியை சாப்பிட்டு வந்தால் குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

இரும்புச் சத்து அதிகமாக உள்ளது என்பதால் ரத்த சோகை மறையும். கால்சியம் அதிகமாக இருப்பதால் எலும்புகள் வலுவடையும்.

வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். இதில் உள்ள மாலிக் அமிலம், காலிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம் மற்றும் டேனின் உள்ளிட்டவை மலேரியாவுக்கு எதிராகவும், ஆன்டி பாக்டீரியல், ஆன்டி ஃபங்கலாக செயல்படும்.

நாவல் கொட்டை பொடியில் எலாஜிக் அமிலம் என்ற ரசாயனம் உள்ளது. இது ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுத்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நாவல் கொட்டை பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறும். நினைவாற்றல் அதிகரிக்கும். செரிமானக் குறைபாடுகள் மறையும். சிறுநீர்க் கடுப்பு, சிறுநீர் பிரச்னைகள் சரியாகும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்வுடன் இருக்கும்.