×

மாம்பழம் சாப்பிட்ட பிறகு இந்த 5 உணவுகள சாப்பிடாதீங்க… உடலுக்கு ஆபத்து என எச்சரிக்கை!

கோடைக்காலம் எவ்வளவு சிரமத்தை நமக்கு கொடுத்தாலும் நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் மாம்பழம் தான். மாம்பழம் பிடிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அதன் சுவைக்கு இந்திய நாக்குகள் அடிமையாகியிருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. உலகத்திலேயே மிகவும் சுவையான மாம்பழங்களை உற்பத்தி செய்யும் ஒரே நாடு இந்தியா தான். வெளிநாடுகளில் இந்திய மாம்பழங்களுக்கென்று தனி மவுசு இருக்கும். அப்படியிருக்கையில் இந்தியர்கள் மாம்பழங்களை விட்டு வைப்பார்களா என்ன? மாம்பழங்களை விட மாங்காய்களுக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. உப்பு
 

கோடைக்காலம் எவ்வளவு சிரமத்தை நமக்கு கொடுத்தாலும் நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் மாம்பழம் தான். மாம்பழம் பிடிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அதன் சுவைக்கு இந்திய நாக்குகள் அடிமையாகியிருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. உலகத்திலேயே மிகவும் சுவையான மாம்பழங்களை உற்பத்தி செய்யும் ஒரே நாடு இந்தியா தான். வெளிநாடுகளில் இந்திய மாம்பழங்களுக்கென்று தனி மவுசு இருக்கும். அப்படியிருக்கையில் இந்தியர்கள் மாம்பழங்களை விட்டு வைப்பார்களா என்ன?

மாம்பழங்களை விட மாங்காய்களுக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. உப்பு காரம் சேர்த்து மாங்காயை தொட்டு சாப்பிட்டால் பூமியில் சொர்க்கம் நம்மை தேடிவரும். அதேபோல அதனுடைய பானமும் கோடையில் சிறந்த நீராதரமாக இருக்கிறது. இப்படி மாம்பழத்தில் பல நன்மைகள் கிடைத்தாலும், அதைச் சாப்பிட்ட பிறகு கீழ்கண்ட ஐந்து உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது என்கின்றனர். அப்படி எடுத்துக்கொண்டால் உடலுக்குத் தீங்கு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீர்: மாங்காயோ மாம்பழமோ சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இது வயிற்று வலி, வயிற்றில் அமிலத்தன்மை பிரச்சினை மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். மாம்பழம் சாப்பிட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு நீங்கள் தண்ணீர் குடிப்பதால் எந்தத் தீங்கும் இல்லை.

தயிர்: மாம்பழத்துடன் சேர்த்து தயிரை உட்கொள்ளவே கூடாது. இதனால் உடலுக்குள் வெப்பத்தையும் குளிர்ச்சையும் ஒருசேர ஏற்படுத்தும். இதன் காரணமாக தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆதலால் இயன்ற வரை இரண்டையும் சேர்த்தோ அல்லது அடுத்தடுத்தோ உட்கொள்ள கூடாது.

பாகற்காய்: மாம்பழம் சாப்பிட்ட உடனே கசப்பான உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது. இதனால் குமட்டல், வாந்தி, சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

காரமான உணவுகள்: மாம்பழம் உண்ட பிறகு காரமான உணவுகளையோ, மிளகாய் சேர்த்த உணவுகளையோ சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான கோளாறுகள் உண்டாகலாம். உங்கள் தோலில் பிரச்சினையை ஏற்படுத்தி முகப்பரு கூட உருவாகலாம்.

குளிர்பானங்கள்: குளிர்ந்த பானங்களுடன் மாம்பழம் சாப்பிடுவதும் தீங்கு விளைவிக்கும். மாம்பழத்திலும் சரி குளிர்பானத்திலும் சரி அதிக சர்க்கரை இருக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.