×

இதயம் காக்க7 வழிகள்!

இதயத்தைப் பாதுகாப்பது நம்முடைய உயிரை பாதுகாப்பதற்கு சமம். இதயத்தை பாதுகாக்கும் 7 வழிமுறைகளைப் பற்றிக் காண்போம். 1. புகையிலைப் பழக்கத்தை கைவிட வேண்டும். புகையிலைப் பழக்கம் உள்ளவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 50 சதவிகிதம் அதிகரிக்கிறது. 2. ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுவது இதயத்தைப் பாதுகாக்கும். உணவில் முழு தானியம், பயிறு வகைகள், பச்சைக் காய்கறிகள், கீரை, விதைகள், எண்ணெய் வித்துக்கள், பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்வது இதயத்தின் ஆரோக்கியத்தை
 

இதயத்தைப் பாதுகாப்பது நம்முடைய உயிரை பாதுகாப்பதற்கு சமம். இதயத்தை பாதுகாக்கும் 7 வழிமுறைகளைப் பற்றிக் காண்போம்.

1. புகையிலைப் பழக்கத்தை கைவிட வேண்டும். புகையிலைப் பழக்கம் உள்ளவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 50 சதவிகிதம் அதிகரிக்கிறது.

2. ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுவது இதயத்தைப் பாதுகாக்கும். உணவில் முழு தானியம், பயிறு வகைகள், பச்சைக் காய்கறிகள், கீரை, விதைகள், எண்ணெய் வித்துக்கள், பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்வது இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும்.

3. தினசரி 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும். குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பை மூன்றில் ஒரு பங்கு அளவுக்குக் குறைக்கிறது.

4. நல்ல நண்பர்களை உருவாக்கிக்கொள்வது இதய நோயைத் தவிர்க்குமாம். நண்பர்களுடன் மனம் விட்டு பேசும் போது மன அழுத்தம் குறைகிறது. இது இதயத்தை காக்க உதவுகிறது.

5. மீன் உணவு அதிகம் எடுத்துக்கொள்வதும் இதயத்தை காக்கும். மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைவாக உள்ளது. இது நல்ல கொழுப்பு அளவு அதிகரிக்கச் செய்யும்.

6. உணவில் அதிக சோடியம் அளவு இருப்பதை குறைக்க வேண்டும். உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. எனவே, உணவில் உப்பு அளவைக் குறைக்க வேண்டும்.

7. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்னை இருந்தால் அதை கட்டுக்குள் வைப்பதன் மூலம் இதயத்தை பாதுகாக்கலாம்.