×

வீட்டில் இருக்கும்போது உங்கள் சருமத்தை கவனித்துக் கொள்வது எப்படி?

மேக்கப் போடாமல் இருப்பது மட்டுமே உங்கள் சருமத்தை கவனித்துக் கொள்ளும் முறை ஆகாது. இந்த ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருக்கும்போது உங்கள் சருமத்தை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்! மேக்கப் போடாமல் இருப்பது மட்டுமே உங்கள் சருமத்தை கவனித்துக் கொள்ளும் முறை ஆகாது. இந்த ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருக்கும்போது உங்கள் சருமத்தை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்! சன் ஸ்கிரீன்: வெயிலில் வெளியேறும்போது மட்டும் தான் சன்ஸ்கிரீனைப்
 

மேக்கப் போடாமல் இருப்பது மட்டுமே உங்கள் சருமத்தை கவனித்துக் கொள்ளும் முறை ஆகாது. இந்த ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருக்கும்போது உங்கள் சருமத்தை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்!

மேக்கப் போடாமல் இருப்பது மட்டுமே உங்கள் சருமத்தை கவனித்துக் கொள்ளும் முறை ஆகாது. இந்த ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருக்கும்போது உங்கள் சருமத்தை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்!

சன் ஸ்கிரீன்:

வெயிலில் வெளியேறும்போது மட்டும் தான் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை. வீட்டில் தங்கியிருக்கும்போதும், உடற்பயிற்சிக்காக வெளியில் செல்லும்போதும், கண்ணாடி ஜன்னல்கள், திரைச்சீலைகள் மூலமாகவும் ஊடுருவி புற ஊதா கதிர்கள் உங்கள் தோலை பாதிக்க வாய்ப்புள்ளது. ஆகவே வீட்டுக்குள் இருக்கும்போதும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது முக்கியம்.

க்ளீன்சர்:

தோல் பராமரிப்பு என்று வரும்போது பலருக்கு சருமம் நிறைய வறண்டு இருப்பதைக் காணலாம். மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவை கூட சருமத்தை பாதிக்கும். இதை தடுக்க க்ளீன்சரை பயன்படுத்தலாம். தினமும் மாலை வேளையில் சருமத்தில் இதை பயன்படுத்தலாம். ஏனெனில் பகலில் உங்கள் சருமத்தில் சேர்ந்த அழுக்கை அகற்றவும், இரவில் உங்கள் சருமம் இயல்பு நிலைக்கு திரும்பவும் இது உதவும்.

ஈரப்பதமாக இருங்கள்:

இது வெயில் காலம் என்பதால் பலர் தங்கள் கைகளில் விரிசல் மற்றும் வறட்சியை காண்கின்றனர். அதனால் கைகளை தவறாமல் அடிக்கடி ஈரப்பதமாக்குவது மிகவும் முக்கியம்.

உதடு பராமரிப்பு:

இந்த வெயில் காலத்தில் புறக்கணிக்கக் கூடாத ஒரு விஷயம் உதடு பராமரிப்பு. லிப் பாம் என்பது ஒரு அத்தியாவசிய அழகு பொருள் மட்டுமல்ல. ஆரோக்கியமான சருமத்திற்கும் அது அவசியம். உதடுகள் உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும். அதனால் அவற்றுக்கு மிக தீவிரமான கவனிப்பு தேவை. எனவே, அடுத்த முறை உங்கள் சருமத்தை கவனித்துக் கொள்ளும்போது, உங்கள் உதடுகளையும் ஈரப்பதமாக வைத்திருக்க மறக்காதீர்கள்.

முகப் பராமரிப்பு:

இந்த வெயில் காலத்தில் முகத்தின் சருமத்தை பாதுகாக்க நீங்கள் சரியான ‘ஃபேஸ் மிஸ்ட்’ முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் வெப்பமான சூழலில் கூட உங்கள் சருமம் ஈரப் பதமாக இருக்கும். முகம் பொலிவாக இருக்க உங்கள் முகத்தில் ஃபேஸ் மிஸ்ட் தெளியுங்கள்!