×

கோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் “மோர்”!

உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதால் முகம் அழகாக மாறும். சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகளுக்கு எதிராக இயற்கை நிவாரணியாக செயல்படும் மோர் என்றதும் நமது தாகத்தை தணிக்கவும், புத்துணர்ச்சிக்கு மட்டுமே என நாம் நினைத்து விடக் கூடாது. உடலுக்கு தேவையான மினரல்கள் மற்றும் நீர்சத்து மோரில் அதிகளவில் உள்ளது. இதோடு மட்டும் மோரின் நன்மைகள் முடிந்து விடுவதில்லை. மோர் உடலுக்கு மட்டுமல்ல சரும அழகிற்கும் பலவித நன்மைகளை செய்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை! பளிச்சென்ற சருமத்திற்கு மோர் மற்றும்
 

உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதால் முகம் அழகாக மாறும். சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகளுக்கு எதிராக இயற்கை நிவாரணியாக செயல்படும்

மோர் என்றதும் நமது தாகத்தை தணிக்கவும், புத்துணர்ச்சிக்கு மட்டுமே என நாம் நினைத்து விடக் கூடாது. உடலுக்கு தேவையான மினரல்கள்  மற்றும் நீர்சத்து மோரில் அதிகளவில் உள்ளது. இதோடு மட்டும் மோரின் நன்மைகள் முடிந்து விடுவதில்லை. மோர் உடலுக்கு மட்டுமல்ல சரும அழகிற்கும் பலவித நன்மைகளை செய்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை!

பளிச்சென்ற சருமத்திற்கு மோர் மற்றும் ஆரஞ்சு தோல்

மோரில் அதிக லாக்டிக் அமிலம் இருப்பதால் சருமத்தை மிருதுவாகவும், பளிச்சென வைக்கவும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதால் முகம் அழகாக மாறும். சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகளுக்கு எதிராக இயற்கை நிவாரணியாக செயல்படும். உலர்ந்த ஆரஞ்சு பழ தோலை அரைத்து, அத்துடன் மோர் கலந்து அந்த பேஸ்டை முகத்தில் பூசி 30 நிமிடங்கள் வைத்திருந்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர ஒரு மாதத்தில் பலன் தெரியும்.

சூரிய ஒளியால் ஏற்பட்ட பாதிப்பை போக்க

அளவுக்கு அதிகமான சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமையை போக்க, மோருடன், தக்காளி ஜூஸை கலந்து அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். இந்த கலவையில் உள்ள விட்டமின்கள் A மற்றும் C சருமத்தில் ஏற்பட்ட பாதிப்பை குணப்படுத்த உதவும். 

வயதான தோற்றத்தில் இருந்து விடுபட

இறந்த செல்களை அகற்றும் ஸ்கர்ப்பராக மோர் செயல்படும். எண்ணெய் பசையை குறைக்கிறது. மோருடன் தேன் கலந்து அதனை முகத்தில் பூசி வர, முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய உதவும். குறைந்த வயதில் வயதான தோற்றம் அடையும் பிரச்னைக்கு இது தீர்வு தரும். எண்ணெய் பசை மிகுந்த முகமாக இருந்தால் இந்த கலவையுடன் சிறிது எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கொள்ளலாம்.

கிளியோபாட்ராவின் அழகு ரகசியத்தில் புதைந்து கிடந்த மோர்

பேரழகி கிளியோபாட்ராவின் அழகு ரகசியம் அவரது மோர் குளியல் தானாம். இதை ஏன் நீங்கள் செய்யக் கூடாது? நீங்களும் கிளியோபாட்ரா ஆக, மோர் மற்றும் ஓட்ஸ் கலவையை சுமார் 15-20 நிமிடங்கள் உங்களது பாத் டப்பில் ஊற வைத்து பின்னர் அதில் குளித்து வர, குழந்தை போன்ற மென்மையான சருமத்தை பெறலாம்.

பட்டு போன்ற அழகான கூந்தலுக்கு

மோர் தலையில் ஏற்படும் பொடுகை கட்டுப்படுத்தும். கூந்தல் வறட்சியை தடுத்து, வளர்ச்சியை தூண்டும். முடி உதிர்தலை தடுக்கிறது. முட்டையை அடித்து அதனுடன் மசித்த வாழைப்பழம், 2 டீ ஸ்பூன் தேன் மற்றும் அதனுடன் கால் கப் மோர் கலந்து தலையில் மாஸ்க் போல் போட்டு 45 நிமிடங்கள் ஊற விட்டு பின்னர் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கூந்தல் வளர்ச்சி இரட்டிப்பாவதுடன், பட்டுப்போன்ற, பளபளப்பான கூந்தலை நீங்கள் பெறலாம்.

சிக்கென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் மோர்

குறைவான உணவைச் சாப்பிட்டு எடையைக் குறைக்க முயலும்போது நீரிழப்பு, சோர்வு போன்றவை ஏற்படும். ஆனால் மோர் குடிக்கும்போது இந்தப் பிரச்னைகள் ஏற்படாது. பால், தயிரைவிட இதில் கொழுப்பும் குறைவு. மோர் எளிதில் பசியைத் தணிக்கக்கூடியது. அதேசமயம், இதில் புரதம், மினரல், வைட்டமின், கால்சியம், மக்னீசியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துகளும் உள்ளன.

செரிமானத்துக்கு உதவும்

தயிரில் செரிமானத்துக்கு உதவும் புரோபயோடிக்ஸ் (Probiotic) பாக்டீரியாக்கள் உள்ளன. தயிரை மோராக மாற்றும்போதும் இதே நன்மைகள் கிடைக்கின்றன. உணவுப்பழக்கத்தை முறையாகப் பின்பற்றாததாலும், நார்ச்சத்துள்ள பொருட்களைச் சாப்பிடாததாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. மோரை தொடர்ந்து குடித்துவர இந்தப் பிரச்னையும் தீரும்.

இதையும் வாசிங்க

உடலை ட்ரிம்மாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டுமா! இதை மட்டும் செய்யுங்க போதும்!