×

அங்க வச்சு…இங்க வச்சு…கடைசியில் குழந்தையின் தலையில் கைவைத்த கொடுமை!?

ராஜஸ்தான் மாநில மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரிகள்,ஷாம்புகள் வைக்கப்பட்டிருந்த குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர்.பறிமுதல் செய்த ஷாம்புகளை தர ஆய்வுக்கு அனுப்பி பரிசோதித்து பார்த்தனர். உங்கள் குழந்தையின் பட்டுப்போன்ற சருமத்திற்கு நாங்கள் உத்தரவாதம் என்று விளம்பரங்களில் நொடிக்கு நொடி வருகிற விளம்பரங்கள் பலவும் நம்பகத் தன்மையை இழப்பது தற்போது அடிக்கடி நடக்கிறது!அந்த வகையில் johnson and johnson ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. குழந்தைகள் தலை
 

ராஜஸ்தான் மாநில மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரிகள்,ஷாம்புகள் வைக்கப்பட்டிருந்த குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர்.பறிமுதல் செய்த ஷாம்புகளை தர ஆய்வுக்கு  அனுப்பி பரிசோதித்து பார்த்தனர்.

உங்கள் குழந்தையின் பட்டுப்போன்ற சருமத்திற்கு நாங்கள் உத்தரவாதம் என்று விளம்பரங்களில் நொடிக்கு நொடி வருகிற விளம்பரங்கள் பலவும் நம்பகத் தன்மையை இழப்பது தற்போது அடிக்கடி நடக்கிறது!அந்த வகையில் johnson and johnson ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

 குழந்தைகள் தலை குளிக்க பயன்படுத்தப்படும் johnson and johnson பேபி ஷாம்புகளில், புற்று நோய் மற்றும்குழந்தையின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃபார்மால்டிஹைடு என்ற வேதிப்பொருட்கள் அதிகளவில் பயன் படுத்தப்பட்டிருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநில மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரிகள்,ஷாம்புகள் வைக்கப்பட்டிருந்த குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர்.பறிமுதல் செய்த ஷாம்புகளை தர ஆய்வுக்கு  அனுப்பி பரிசோதித்து பார்த்தனர்.

 ஆய்வின் முடிவில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அஸ்பெஸ்டாஸ் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது! இந்நிலையில், johnson and johnson  பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

 இது குறித்து johnson and johnson நிர்வாகத்தின் தரப்பிலிருந்து ‘குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுறுத்தல் தொடர்பான எந்த தகவலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும்,மத்திய மருந்து ஆய்வகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர்தான் முடிவுக்கு வர முடியும்’ தங்கள் தரப்பு விளக்கத்தைச் சொல்லியிருக்கிறது.

 இந்தியாவின் எதிர்காலத்தையே அசைத்துப்பார்க்கிற இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது!