×

முதிய வயதிலும் சிங்கம் மாதிரியிருக்க ஜிங்க் சத்துள்ள உணவுகள்

 

துத்தநாகம் நமது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையான கனிமங்களில் ஒன்றாகும். இது விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், ஆண் கருவுறுதலையும் அதிகரிக்கும். எனவே, துத்தநாகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் உடல்நலம் மற்றும் நோய் தடுப்புக்கு அவசியம்.உங்களிடம் சில ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டால், நீங்கள் நினைத்தபடி ஆரோக்கியமாக இருக்க மாட்டீர்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி-யை போலவே ஜிங்க் (Zinc)எனப்படும் துத்தநாகம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு துத்தநாகம் ஊக்கமளிக்கிறது. இது பல உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவை மற்றும் வாசனையை நாம் சரியாக உணர இது அவசியம். உடல், தோல், கணையம், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் வலுவான தசைகளில் உள்ளது. ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்திக்கு துத்தநாகத்தின் தேவை அவசியமாகிறது.


 நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க தினசரி குறைவான அளவு துத்தநாகம்(பெண்களுக்கு 8 மி.கி, ஆண்களுக்கு 11 மி.கி) உடலுக்கு தேவைப்படுகிறது. மாமிச உணவுகள் ஜிங்க் சத்தின் ஆதாரமாக கருதப்பட்டாலும் சைவ உணவு உண்பவர்களுக்கும் சில சிறந்த தாவர அடிப்படையிலான துத்தநாக சத்து நிறைந்த உணவுகள் உள்ளன.

1. பாதாம் பருப்பு

பாதாம் நமது ஆரோக்கியத்திற்கு நம்பமுடியாத அளவிற்கு நல்லது. நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு சில பாதாம் பருப்பை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. அவை சிறந்த ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளன.

பாதாம் பருப்பில் 100 கிராமுக்கு 3.1 மி.கி துத்தநாகம் உள்ளது, இது தினசரி தேவையான மதிப்பில் 28% ஆகும்

2. முந்திரி பருப்பு

முந்திரி பருப்பு ஒரு ஆரோக்கியமான உணவு. அவை கொழுப்பில் நிறைந்திருந்தாலும், நம் உடலுக்கு வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் எண்ணற்றவை.

முக்கியமாக, அவை 100 கிராமுக்கு 5.78 கிராம் துத்தநாகத்தைக் கொண்டிருக்கின்றன. இது தினசரி மதிப்பில் 52% ஆகும்

3. அக்ரூட் பருப்புகள்

 

அக்ரூட் பருப்புகள் எனப்படும் வாதுமைக் கொட்டைகளில் ஒமேகா-3 கொழுப்பு உட்பட எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை நம் உடலில் கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகின்றன.

மேலும், வாதுமைக் கொட்டைகளில் துத்தநாகமும் நிறைந்துள்ளது. எனவே இவற்றை அடிக்கடி உண்டு வருவது உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் 100 கிராமுக்கு 3.09 மி.கி துத்தநாகம் உள்ளது, இது தினசரி மதிப்பில் 28% ஆகும்