×

இன்று உலக பொழுதுபோக்கு நடை தினம் (World Sauntering Day) – மெதுவாக, ரிலாக்ஸாக நடந்து செல்லுங்கள்

உலகம் முழுக்க இன்று ‘உலக பொழுதுபோக்கு நடை தினம்’ (World Sauntering Day) கடைபிடிக்கப்படுகிறது. ‘உலக பொழுதுபோக்கு நடை தினம்’ (World Sauntering Day) இன்று உலகம் முழுக்க கடைபிடிக்கப்படுகிறது. அதாவது மெதுவாக, ரிலாக்ஸாக நடந்து செல்வதை வலியுறுத்தும் வகையில் இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ‘சாண்டர்’ என்ற வார்த்தையின் அர்த்தம் மெதுவாக நிதானமாக நடப்பது ஆகும். பரபரப்பான தினசரி வாழ்க்கையிலிருந்து மெதுவாக செல்ல அறிவுறுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும். உண்மையில்
 

உலகம் முழுக்க இன்று ‘உலக பொழுதுபோக்கு நடை தினம்’ (World Sauntering Day) கடைபிடிக்கப்படுகிறது.

‘உலக பொழுதுபோக்கு நடை தினம்’ (World Sauntering Day) இன்று உலகம் முழுக்க கடைபிடிக்கப்படுகிறது. அதாவது மெதுவாக, ரிலாக்ஸாக நடந்து செல்வதை வலியுறுத்தும் வகையில் இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ‘சாண்டர்’ என்ற வார்த்தையின் அர்த்தம் மெதுவாக நிதானமாக நடப்பது ஆகும். பரபரப்பான தினசரி வாழ்க்கையிலிருந்து மெதுவாக செல்ல அறிவுறுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.

உண்மையில் இதை விட சிறந்த நேரத்தில் இந்த தினம் இனி எந்த ஆண்டும் வரப் போவதில்லை. ஏனெனில், கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு வருவதால் தற்போது மக்கள் வீட்டை விட்டு வெளியேறி நடந்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் அவ்வாறு வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா பரவல் அச்சம் காரணமாக வீட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை எனில் வீட்டு மொட்டை மாடி, தோட்டம், பால்கனி, குடியிருப்பு வளாகம் ஆகிய இடங்களில் கூட ரிலாக்ஸாக நடந்து செல்லலாம்.