×

உலகத்தின் நம்பர்-1 குழம்பு ‘ரசம்’ – இட்லிதான் சூப்பர்…

தமிழர்களின் கண்டு பிடிப்பான ரசமும், இட்லியும் உலக அளவில் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக இது பற்றிய ஆய்வு முடிவுகள் நம் முன்னோர்கள் பற்றி வியக்கவைக்கின்றன.தமிழகத்தில், காலை உணவில் நம்பர் – 1 இடம் வகிக்கும் இட்லியை உலக அளவில் நூற்றுக்கணக்கில் ஆராய்ச்சிகள் மேற்கோண்டு தங்கள் முடிவுகளை தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவருமே உலக அளவில் இது மிகச் சிறந்த உணவு என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் சொல்லவில்லை. மனிதர்கள் நோயின்றி வாழச் சிறந்த உணவு இட்லி தான் என்று
 

தமிழர்களின் கண்டு பிடிப்பான ரசமும், இட்லியும் உலக அளவில் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக இது பற்றிய ஆய்வு முடிவுகள் நம் முன்னோர்கள் பற்றி வியக்க
வைக்கின்றன.தமிழகத்தில், காலை உணவில் நம்பர் – 1 இடம் வகிக்கும் இட்லியை உலக அளவில் நூற்றுக்கணக்கில் ஆராய்ச்சிகள் மேற்கோண்டு தங்கள் முடிவுகளை தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவருமே உலக அளவில் இது மிகச் சிறந்த உணவு என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் சொல்லவில்லை. மனிதர்கள் நோயின்றி வாழச் சிறந்த உணவு இட்லி தான் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

உலகச் சுகாதார நிறுவனம் இட்லி, சாம்பார், சட்னி ஆகியவற்றில் புரதம், நார்சத்து, கார்போஹைட்ரேட் ஆகிய முழுமையான ஊட்டச்சத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. ஒரு இட்லியில் 85 கலோரிகள் உள்ளது. 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. ஒருவர் சுமார் 5 இட்லிகள் சாப்பிடுவதால் திசுக்களை புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் 3 மடங்கும், சிறுநீரகங்களின் செயற்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் 10 மடங்கும் அதிகரிக்கின்றன. அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கல்சியம், பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக செயலாற்றுகின்றன என உலக ஆய்வுகள் அறிக்கைகள் வெளியிடுள்ளன.

இங்கிலாந்து நாட்டின் தேசிய உணவுத் திட்டத்தின் கீழ் இட்லி தோசை, கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயணிகள் விரும்பிச் சாப்பிடுவது இட்லியைத்தான்.
இட்லியின் தாயகம் இந்தோனேஷியா என்பார்கள். உண்மை அதுவல்ல. இது தமிழனின் கண்டு பிடிப்பு. ‘இட்டரிக’ என்று 7-ம் நூற்றாண்டிலும் ‘இட்டு அவி’ என -12ம் நூற்றாண்டிலும்அழைக்கப்பட்டு, இச் சொல் மருவி ‘இட்டலி’ என்றானது. பின்னர் பேச்சு வழக்கில் “இட்லி” என ஆனது. உரலில் இடித்த அரிசி மாவைக் வைத்து அப்பம், கொழுக்கட்டை, ஆகியவற்றை கண்டறிந்த தமிழன், அதன் தொடர்ச்சியாகவே இட்லியைக் கண்டறிந்தான்

ஐந்து நட்சத்திர உணவு விடுதி முதல் கையேந்தி பவன்கள் வரை இட்லிக்கு மக்கள் ஆதரவு உள்ளது. நோயாளிகள், பத்தியம் இருப்பவர்கள், விரதம் இருப்பவர்கள் எல்லோருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இட்லி எளிதில் செரிமானம் ஆகிவிடுவது எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

உலகில் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கி, ஆண்டுதோறும் மார்ச் மாதம் 30 ஆம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையைச் சேர்ந்த இனியவன் என்பவர்தான் உலக இட்லி தினத்தைக் கொண்டாடக் காரணமானவர். இவர் 124 கிலோவில் இட்லி செய்து கின்னஸ் சாதனை படைத்தவர்.

இதே போல் தமிழகத்து தாய்மார்கள் தயாரிக்கும் சாம்பார், ரசம், வத்தக் குழம்பு,உருண்டைக் குழம்பு எனப் பலவகை குழம்புகளில் ரசம்தான் உலகத்தின் ‘நம்பர் – ஒன்’ குழம்பு என சமீபத்தில் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ஒரு உணவு ஆரய்ச்சி நிறுவனம் இந்த தகவலைச் சொல்லியிருக்கிறது. வயிறு சம்பந்தமான பல நோய்களை குணமாக்கும் மாற்று மருந்தாக ரசம் இருப்பதாகவும், வைட்டமின் குறைபாடு,மற்றும் தாது உப்புக் குறைபாடுகளை ரசம் சரி செய்கிறது எனவும் சொல்லி இருக்கிறார்கள். தமிழர்கள் கண்டு பிடித்த இந்த ரசத்தைதான் வெளி நாட்டினர் “சூப்” வகைகளாக தயார் செய்து குடிப்பதாவும் புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளன.

-போஸ்