×

பெண்களின் மாதவிடாய் காலத்தில்  எந்த நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம் தெரியுமா ?

 

பொதுவாக சில பெண்களுக்கு ஒவ்வொரு மாதம் மாதவிடாய் காலத்தில் பல்வேறு தொந்தரவுகளை அனுபவிப்பர் .சில பெண்களுக்கு வலியிருக்கும் .சில பெண்களுக்கு அதீத ரத்த [போக்கு இருக்கும் .இப்படி இருந்தால் எந்த வயதில் என்னென்னெ நோய்கள் வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 
1.பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ரத்தம் கட்டி கட்டியாக வெளியேறுவது மற்றும் ஒருநாளைக்கு 2-3 நாப்கின்கள் முழுவதும் நனைந்து வெளியேற்றுவது இவற்றைத்தான் அதீத ரத்தப்போக்கு என்கிறோம். 
2.பெண்களின் மாதவிடாய் காலத்தில் ரத்தம் கட்டி கட்டியாக வெளியேறுவது நிச்சயமாக அதீத ரத்தப்போக்கின் அறிகுறிதான்.
3.பெண்களின் மாதவிடாய் காலத்தில்அதிகமான ரத்தப்போக்கு இருந்தால், ரத்தம் உறைந்து அப்படியே கட்டி கட்டியாக வெளியேறும். 
4.சில பெண்களின் 20 - 25 வயதில் மாதவிடாய் காலத்தில் அதீத ரத்த போக்கு இருக்கும் 
5.இது `Polycystic Ovaries’ எனப்படும் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். 
6.மேலும் உடற்பயிற்சிகள் இல்லாமல், உணவு முறை சீராக இல்லாமலிருந்தாலும்  இது ஏற்பட வழிவகுக்கும்.
7.சில பெண்களின் 25 - 35 வயதில் அதீத ரத்த போக்கு இருக்கும் 
8.கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான மிக முக்கியமான அறிகுறியாக இருக்கும். 
9.அல்லது நீர்க்கட்டிப் பிரச்னையாகவும் இருக்கக்கூடும். 
10..சில பெண்களுக்கு அபார்ஷன் ஏற்படுவதைக் குறிக்கலாம். ஆகவே அதை உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.
11.சில பெண்களின் 45 வயதில் அதீத ரத்த போக்கு இருக்கும் 
12.இப்படி போவது கர்ப்பப்பைவாய் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம்.