×

போதுமான நீர் அருந்தாவிட்டால் என்ன பாதிப்பு வரும் தெரியுமா ?

 

பொதுவாக நம் உடல் எடை சில நாள் அதிகரித்தும் ,சில நாள் குறைந்தும் காணப்படும் .இதற்கு அறிவியலில் பல காரணம் உண்டு ,அதன் படி இப்படி திடீரென்று உடல் எடையில் மாற்றம் வர என்ன காரணம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1..ஒரு சிலர் முந்திய நாள் இரவு அதிகம் மது அருந்தியிருப்பர் . அல்லது முந்தின நாள் போதுமான நீர் அருந்தாமல் இருந்திருப்பர் .இதனால்  மறுநாள் உடல் எடையில் மாற்றம் தென்படும். 
2.இப்படி போதுமான நீர் அருந்தாவிட்டாலும், மது அருந்தினாலும் உடல் நீரை வெளியேற்றாமல் தக்க வைத்துக்கொள்ளும். உடலில் நீர் சேர்வதால் உடல் எடை அதிகரித்து காணப்படுகிறது . 
3. சிலர் போதுமான நேரம் உறங்காமல் இருப்பர் . மற்றும் ஒரு சிலர் ஆழ்ந்து உறங்காமல் இருப்பர் . இவை இரண்டுமே உடல் எடை திடீரென அதிகரிக்க காரணமாகின்றன. 
4.இப்படி குறைந்த நேரம் உறங்கினால், மறுநாள் அதிகமாக அளவு உண்ணும்படி நேரக்கூடும். 
5.வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு சாப்பிடும்போது, உடலின் நேர ஒத்திசைவு செயல்பாடு பாதிப்புக்குள்ளாகிறது. 
6. முந்தின நாள் உணர்ச்சிரீதியான அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்போரின் எடை மறுநாள் அதிகரிக்க வாய்ப்புண்டு. 
7.மன அழுத்தம் அதிகமாகும்போது உடலில் கொழுப்பை சேர்க்கும் கொர்டிசோல் என்ற ஹார்மோனின் உற்பத்தி உயருகிறது. இதன் காரணமாக உடலில் கொழுப்பு படிகிறது.. 
8.இதன் காரணமாக உடல் எடைதிடீரென உயர்ந்து காணப்படுகிறது.