×

சிரமமில்லாமல் எடையை குறைக்க சில குறுக்கு வழிகள்

 

இன்று வாலிபர்கள் முதல் வயோதிகர்கள் வரை வாட்டியெடுக்கும் பிரச்சினை உடல் எடையை குறைப்பதுதான் .அதனால் அவர்கள் பல வழிகளில் எடை குறைப்பு முயற்சியில் ஈடு படுகின்றனர் .இந்நிலையில் சிரமமேயில்லாமல் உணவின் மூலம் எப்படி எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கலாம் என்று நாம் இந்த பதிவில் பார்க்கலாம் 

உடல் எடையை குறைக்க இந்த முறைகளை பின்பற்றவும்

காலை

ஒரு நாள் பொழுதை நீங்கள் க்ரீன் டீயுடன் தொடங்கலாம் .காலையில் 5 கிலோமீட்டர் தூரம் வாக்கிங் முடித்து விட்டு ஒரு க்ரீன் டி குடியுங்கள் .பின்னர் குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளான ஓட் மீல், பழங்கள் ஆகியவற்றை காலை டிபனாக எடுத்து கொள்ளுங்கள் .அதன் மூலம் உங்களுக்கு போதிய அளவு புரதம் கிடைத்து விடும் ,பின்னர் உங்கள் வழக்கமான பணிகளை செய்யுங்கள்

பின்னர் 1 மணிக்கு மதிய உணவினை  , உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மதியம் 2 சப்பாத்தி, சிறிது சாதம், புரதம் நிறைந்த பருப்பு மற்றும் பச்சை காய்கறிகளை சாப்பிட வேண்டும். மதிய உணவை உட்கொண்ட பிறகு, கண்டிப்பாக மோர் அல்லது லஸ்ஸி அருந்தவும். இந்த வழிகளில் உடலுக்கு அதிக புரதம் கிடைத்து விடுவதால் உங்கள் உடல் ஒரு முழு ஆரோக்கியமான மீல்ஸ் உண்ட திருப்தியினை அடைகிறது .

.

இரவு 8 மணிக்கு உங்கள் இரவு உணவில் காய்கறிகளின் சாலட், பழங்களை உட்கொள்ளலாம். இரவில் உட்கொள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடலுக்கு ஏற்ற உணவாகும் . ஏனெனில் அதில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன்  அதில் மாவுச்சத்து , நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. மேலும் இது ஜீரணிக்க எளிதானது மற்றும் கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் படைத்த உணவாகும் .இந்த வழியை பின்பற்றினால் ஒரே மாதத்தில் உங்கள் உடல் எடையில் நல்ல முன்னேற்றம் காணப்படும்