×

உடல் எடையை கூறு போடும் பழ சாறு தயாரிக்கும் முறை

 

உடல் எடையை குறைக்க இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை படாத பாடு படுகின்றனர் .அதற்காக பல தவறான டயட் மேற்கொண்டு பக்க விளைவை சந்தித்து வருகின்றனர் .உடல் எடையை குறைப்பது எளிதான விஷயமில்லை .அதற்காக தவறான  உணவுகளை எடுத்து கொண்டால் அது அதிக பசியை தூண்டிவிடும் .இதனால் நாமும் அதிகமாக சாப்பிட்டு எடை கூடி விடும் .எடை கூடாமல் இருக்க ஒரு அற்புதமான பழ சாறு உள்ளது அதை எப்படி தயாரிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

உடல் எடையை குறைக்க பல எளிமையான மற்றும் இயற்கை வழிகள் இருக்கிறது.

அதில் முக்கியமான ஒரு வழி பழச்சாறு அருந்துவது சில பழங்களில் சர்க்கரை மற்றும் கலோரிகளின் அளவு மிகக் குறைவாக இருக்கும்.

ஆகையால் இவற்றின் சாறு உடலில் எடை குறைப்பு மட்டுமல்லாமல் பல ஊட்ட சத்துக்களையும் அள்ளி கொடுக்கும்

பழச்சாறு செய்ய தேவையான பொருளும் செய்யும் முறையும்

எடையை குறைக்க பீட்ரூட், வெள்ளரிக்காய், பேரிக்காய், இஞ்சி, கேரட், ஆகியவற்றை முதலில் எடுத்து கழுவி வைத்து கொள்ள வேண்டும் .பின்னர் அவற்றை ஒன்றாக மிக்சியில் போட்டு நன்கு அரைத்து ஜூஸ் செய்து கொள்ள வேண்டும்.

இப்போது அரைத்த காய் கறி கலவையை ஒரு பெரிய பாத்திரத்தில் வடிகட்டி எடுத்து கொள்ளவேண்டும்.

இதன் பிறகு அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து, உப்பு, மிளகு தூள் சேர்த்து, நன்கு கலக்கி எடுத்து கொள்ள  வேண்டும்.

அதன் பின்னர் இந்த சாற்றை ஒரு டம்ளரில் ஊற்றி புதினா இலைகள் கொண்டு நன்கு கலக்கி தினம் குடித்து வர வேண்டும் .இப்படி தினம் குடித்து வந்தால் போதும், உங்கள் உடல் எடை குறைந்து வருவதை கண் கூடாக காணலாம் .