நீரிழிவு நோயால் அவதியுறுபவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிங்க
பொதுவாக சீரகத்தில் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .உதாரணமாக
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு சிட்டிகை வறுத்த சீரகத்தூள், சிறிது இஞ்சி, பாறை உப்பு மற்றும் அரை டீஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து தண்ணீரை கொதிக்க வைத்து , அது குளிர்ந்ததும் குடிக்க வயிற்று வலி மற்றும் குடல் வாயுவை நீக்குகிறது.மேலும் சீரகத்தின் மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்
1.சீரகத்தில் வைட்டமின் ஏ மாற்று வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளன. இந்த இரண்டு சத்துகளும் உடலின் வெளிப்புறதிலிருந்து வரும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய் தொற்றை தடுக்கிறது.
2.சீரக தண்ணீர் இரும்பு சத்து அதிகம் கொண்டிருப்பதால் உடலுக்கு கூடுதல் பலத்தையும் தருகிறது.
3.உடலில் ஓடும் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால் ரத்த சோகை நோய் உண்டாகிறது. இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சிறிதளவு சீரக தண்ணீரை குடித்து வந்தால், ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
4.தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு சிறிது சீரக தண்ணீரை அருந்தி வந்தால் தூக்கமின்மை நீங்கும்.
5.நீரிழிவு நோயால் அவதியுறுபவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீரை அருந்துவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வருகிறது.
6.சீரகம் நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் ஏற்படும் புண்கள், காயங்களையும் வேகமாக ஆற்றுகிறது.
7.உடல் எடையை குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றோடு சீரக தண்ணீரையும் தினந்தோறும் சிறிதளவு அருந்தி வர உடலை எடை நன்கு குறையும்.
8.சீரகம் வயிறு மற்றும் செரிமான அமைப்பை வலுப்படுத்த ஒரு நல்ல மூலமாகும்.
9.தினமும் சீரகம் உட்கொள்வதால் வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை.
10.வயிற்றுப் பிரச்சினையிலிருந்து விடுபட, ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடியைச் சேர்த்து, கலந்து குடிக்க நல்ல பலன் கிடைக்கும்