×

இதயத்தை காக்க எந்த வைட்டமின் தேவை தெரியுமா ?

 

பொதுவாக நம் உடல் ஆரோக்கியத்துடன் இயங்க விட்டமின்கள் அவசியம் ,,அந்த வகையில் நம் உடலுக்கு தேவையான விட்டமின் டியை நாம் எப்படி பெற்று ஆரோக்கியமாய் வாழலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.ஊட்டச்சத்து ‘டி’ அல்லாவிடின், ஆங்கிலத்தில் விட்டமின் ‘டி’ என்ற சொல்லினைக் கேட்டதும் சூரியஒளி நினைவு வருவதைத் தவிர்க்க முடியாது. 
2.சூரியனிலிருந்து வரும் குறிப்பிட்ட அலைவீச்சிலான கதிர்கள் தோலில் படுகையில், ஊட்டச்சத்து ‘டி’ உருவாகும் .. 
3.மேலும் ,விட்டமின் டி கிடைக்க  பாற்கட்டி, முட்டை, சில வகைத் தானியங்கள் என்பவற்றினை உணவாக நுகர்கையிலும் இந்த ஊட்டச்சத்து கிடைக்கப்பெறுகின்றது.
4.எனவே, இதய நோயாளிகள் வெளியிடங்களில் நடமாடுவது, அவர்களின் உடலில் சூரிய ஒளி படுவதற்கு வழியேற்படுத்தி, உடலில் ஊட்டச்சத்து ‘டி’ உருவாகுவதற்கு வழிவகுக்கும். 
5.ஆனால் அந்நபர்களின் முதுமையும், இதயநோயின் அபாய சாத்தியமும் வெளிப்புறத்திலான நடமாட்டத்திற்கு அனுமதிக்காவிட்டால், இந்த ஊட்டச்சத்துக் கொண்ட உணவுகளை உட்கொள்வது சிறந்தது. 6.அல்லாவிடின், ஊட்டச்சத்து ‘டி’ கொண்ட மருந்துகளை எடுத்து கொண்டு  இதயம் சிறந்த முறையில் தொழிற்பட வழிவகுக்கலாம் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்