வாயு தொல்லையால் வரும் உடல் வலி முதல் மன வலி வரை தீர்க்கும் இந்த வெத்தலை சூப் தயாரிக்கும் முறை
குடற்பகுதிகளில் தேங்கும் செரிக்காத உணவுக் கூழ்மங்களில், அங்கு வாழும் பாக்டீரியாக்கள் உண்டாக்கும் நொதித்தல் (Fermentation) காரணமாகவே வாயு ஏற்படுகிறது. மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் மலத்தை வெளியேற்றுவது அவசியம். இல்லையெனில் மலம் வெளியேறாமல் நீண்ட நேரம் குடற்பகுதியில் தேங்கும். கூடுதல் நொதித்தல் காரணமாக நாற்றத்துடன் கூடிய வாயு வெளியேறும். உணவுப் பொருட்களை முழுமையாக உட்கிரகிக்க முடியாதபோதும் வாயு ஏற்படலாம். வாயுவால் ஏற்படும் பிரச்னையை 'வாய்வு' என்கிறது மருத்துவ மொழி.
குடற்பகுதியில் வாழும் நலம் பயக்கும் பாக்டீரியாக்களின் அழிவும் வாயு ஏற்படுவதற்கு ஒரு காரணம். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ளப்படும் சில மாத்திரைகளின் விளைவாகவும் குடற்பகுதியில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழியும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். சில நேரங்களில், சிறுகுடல் பகுதியில் அளவுக்கு அதிகமாகப் பாக்டீரியாக்கள் கூடும்போதும் வாய்வுப் பிரச்னை உண்டாகும்.
வெற்றிலை, உடலுக்கு செரிமான சக்தி கொடுக்ககூடியது. பாம்பு கடித்தால் வெற்றிலை சாறு குடிக்க கொடுத்தால் விஷம் குறையும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த வெற்றிலையை புறக்கணித்து வரும் பொதுமக்கள், இளைஞர்கள் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எனவே, சாப்பாடு சாப்பிட்ட பின்னர் தினமும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு பயன்படுத்த வேண்டும். இதனால் உடல் வலிமை பெறும் இவ்வாறு சித்த மருத்துவர்களும் ஆலோசனை கூறுகின்றனர்.
தீராத வாயுத்தொல்லை உள்ளவர்கள் வெற்றிலை மற்றும் திப்பிலி கலந்த சூப் குடித்தால் குணமாகிவிடும் என நம் முன்னோர்கள் எழுதி வைத்த குறிப்புகள் கூறுகின்றன,. இந்த சூப் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்
வெற்றிலை – 6,
மிளகு பொடி – 1/2 டீஸ்பூன்
திப்பிலி – 2 டீஸ்பூன்,
பூண்டு – 10 பல்
பெருங்காயப்பொடி, உப்பு – தேவையான அளவு
சூப் செய்வது எப்படி: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, சூடானதும் நசுக்கிய பூண்டு, திப்பிலி, பெருங்காயப்பொடி, வெற்றிலை, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். வெற்றிலை நன்கு வெந்ததும், சூப்பை வடிகட்டி மிளகுத்தூள் சேர்த்து அருந்தலாம்
எண்ணெய்யில் பொறித்த இறைச்சி, கொழுப்பு நிறைந்த உணவுகள், செரிமானத்தைத் தாமதமாக்கி, வாயுப் பெருக்கத்திற்கு வழிவகுக்கும். நார்ச்சத்து மிகுந்த உணவுகள், உடலுக்கு அதிக நன்மை செய்வதாயிருப்பினும் சிலருக்கு வாயுவை உருவாக்கலாம்.
பெருங்குடல் சார்ந்த நோய்கள், குளுடன் புரதத்தைச் செரிக்க முடியாமல் போவது, செரிமான தசைகளில் பாதிப்பு, வயிற்றுப் புண் போன்றவற்றின் காரணமாக, அந்தந்த நோய்க் குறிகுணங்களுடன், ஒரு நாளில் பல முறை வாயு வெளியேறும்.
புதினா துவையலை அவ்வப்போது செய்து சாப்பிடலாம். பழங்களில் அன்னாசி நல்லது. நலம் பயக்கும் பாக்டீரியாக்களை அதிகரிக்க மோர் சிறந்த பானம். மலத்தை இளகலாக்க நிறையத் தண்ணீர் குடிப்பது முக்கியம். பூண்டுப் பற்களை நன்றாக வேகவைத்துச் சாப்பிடலாம். சித்த மருந்துகளில், இஞ்சித் தேன், , சோம்புத் தீநீர், ஓமத் தீநீர், பஞ்ச தீபாக்கினி சூரணம் (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் சேர்ந்தது), ஏலாதி சூரணம். சீரகச் சூரணம் போன்ற மருந்துகள் சிறந்த பலனை அளிக்கும். தயிர்ச்சுண்டி சூரணம் எனும் மருந்து, வாயுப் பிரச்னையோடு சேர்த்து, வயிற்று உப்புசம், வயிற்றுவலி போன்றவற்றை உடனடியாக குறைக்கும்.