×

நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது இந்த காய்

 

பொதுவாக காய் கறிகளில் கேரட்டுக்கு என்று ஒரு தனி மருத்துவ குணமுண்டு .அந்த கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ அல்லது ஜூஸ் போட்டோ சாப்பிட்டால் நம் உடலில் பல்வேறு நோய்கள் குணமாகும் ,இந்த பதிவில் கேரட் மூலம் குணமாகும் நோய்கள் பற்றி பார்க்கலாம் 

1.பொதுவாக ஒருவர் தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வரும்பொழுது அது அவரின்  உடல் எடையை குறைக்க உதவுகிறது. 
2.ஒரு கப் கேரட்டில் மிக குறைந்த அளவு கலோரிகள் உள்ளது. ஆனால் அதிக அளவு ஊட்டச்சத்து இதில் காணப்படுவதால் இதன் மூலம் உடல் எடை குறையும் . 
3.கேரட்டில் உள்ள  ஊட்டச்சத்துக்கள் உங்களை நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. 
4.சிலருக்கு சரும பிரச்சினை இருக்கும் .இந்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது கேரட். 
5.கேரட் முகத்தில் ஏற்படக்கூடிய முகப்பரு, தோல் அழற்சி, சொறி மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும் 
6.கேரட்டில்  காணப்படக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பி கரோட்டின் சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 
7.மேலும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது கேரட். 
8.கேரட்டில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. 
9.இதன் இம்மியூனிட்டி பவரால்  நுண்கிருமிகள் உடலில் நோய் தொற்றுகளை ஏற்படுத்தாத வண்ணம் பாதுகாக்கப்படுகிறது.
10.நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது கேரட். தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வரும் பொழுது அது கரோனரி இதய நோய் வருவதை தடுக்கிறது . 
11.மேலும் கேரட்  இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.