×

எந்த நிறத்தில் யூரின் போனால் என்ன நோய் தெரியுமா ?

 

பொதுவாக காலையில் எழுந்தவுடன் சிலருக்கு சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போகும் .இப்படி வெளியேறுவது அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான் அதற்காக பயப்பட தேவையில்லை, இரவு முழுவதும் தண்ணீர் அருந்தாமல் இருப்பதால் தான் காலையில் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் உள்ளது.இப்படி சிறுநீர் என்ன கலரில் வெளியேறினால் என்ன பாதிப்பு வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.சிலருக்கு பகல்பொழுதில் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போகும் .இப்படி வெளியேறுவது உடம்பில் நீர் பற்றாக்குறைதான்  காரணம் . 
2.இந்த மஞ்சள் நிறம் மாற தண்ணீர் அதிகமாக குடித்தால் மஞ்சள் நிறம் மாறி இயல்பான நிலையில் இருக்கும்.
3.சில சமயங்களில் ஆரஞ்சு நிறத்தில் சிறுநீர் வெளியேறச்செய்யும்.இதற்கு காரணம் சில மாத்திரைகளை உட்கொள்வதன்மூலமாகவும், கேரட், பீட்ரூட் போன்ற உணவுகளை உட்கொள்வதன் மூலமும் சிறுநீர் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும்.
4.சிலருக்கு சிவப்பு நிறத்திலும் சில சமயங்களில் சிறுநீர் வெளியேறச்செய்யும், 
5.இதற்கு காரணம் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் சிறுநீர் வழியாக வெளியேறுவதால் கூட சிவப்பு நிறத்தில் சிறுநீர் வரலாம்.
6.சிலருக்கு பழுப்பு நிறத்திலும் சில சமயங்களில் சிறுநீர் வெளியேறச்செய்யலாம், 
7.இதற்கு காரணம் , வலிப்பு, மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு உண்ணும் மாத்திரைகளினாலும் பழுப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறச்செய்யும்.
8.சிலருக்கு பச்சை நிறத்தில் சிறுநீர் போகும் .இப்படி போவது தொற்று காரணமாக கூட இருக்கலாம் , 
9.சிலருக்கு கல்லீரலில் பித்தநீர் பிரச்னை இருக்கும் இப்படி  இருந்தாலும் சிறுநீர் பச்சை நிறத்தில் வெளியேறும்
10.சிலருக்கு  சிறுநீர் புகைபடர்ந்தது போல் காட்சியளிக்கும் 
11.இதற்கு சிறுநீர் வரும் பாதையில் அல்லது சிறுநீர் பையில் ஏற்பட்ட தொற்றுக்கள் காரணமாக இருக்கும் மற்றும் கிட்னியில் கல் இருந்தால் கூட சிறுநீர் புகைபடர்ந்தது போல் தோன்றும்.