×

இந்த முறையை பின்பற்றினால் வயிறு வீங்குவதில் இருந்து விடுப்படலாம்

 

பொதுவாக சிலருக்கு சாப்பிட்டவுடன் வயிறு  வீங்குவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். சிலருக்கு வாயு பிரச்சினை காரணமாக உப்பலாம் ,இன்னும் சிலருக்கு அதிகமாக உண்ணுவதாலும் ,இன்னும் சிலருக்கு தவறான முறையில் உண்பதாலும் இந்த பிரச்சினை ஏற்படலாம் .இந்த பிரச்சினையிலிருந்து எப்படி விடுபடலாம் என்று இந்த பதிவில் பாக்கலாம் 

1.அதிகப்படியாக உணவு சாப்பிடுவது, விரைவாக உணவை சாப்பிடுவது, சரியாக மெல்லாமல் உணவை அப்படியே விழுங்குவதாலும்  சாப்பிட்டவுடன் வயிறு  வீங்குவது ஏற்படும். 
2.மேலும் உணவை சாப்பிடும்போது  பொழுது அதிலிருந்து வரும் வாயுக்கள் வெளியேறாமல் வயிற்றிலே தங்கிவிடுவதாலும் வயிறு வீங்குகின்றது.
3.இந்த பாதிப்பை தடுக்க ஒரே நேரத்தில் உணவை சாப்பிடாமல் சிறிய அளவுகளாக பிரித்து சாப்பிடுவது நல்லது. 
4.மேலும் உணவை பிரித்து சாப்பிட்டும்  இதிலிருந்து வெளிவர முடியவில்லை என்றால் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு இந்த பானத்தை செய்து குடித்தால் நல்லது.
5.முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.   
6.அடுத்து தண்ணீர் கொதித்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு தே.கரண்டி துருவிய இஞ்சி, 5 இல் இருந்து 6 புதினா இலைகள், ஒரு தே.கரண்டி வெந்தய விதைகள் சேர்த்து ஒரு சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
7.பின் வடிக்கட்டி அந்த நீரை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
8.அதனுடன் எழுமிச்சை சாறு ஒர துளி சேர்த்து கொள்ளவும்., 
9.இந்த கலவையை வெதுவெதுப்பாக பருகி வந்தால் வயிறு வீங்குவதில் இருந்து விடுப்படலாம் .